பாரதியார் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்புகள்!



அட்மிஷன்

பாரதியார் பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 39 துறைகளும், 13 பள்ளிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தற்போதைய நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 91 இருபாலரும் பயிலும் கல்லூரிகள், 18 பெண்கள் கல்லூரிகள் மற்றும் 4 ஆண்கள் கல்லூரிகள் உள்ளிட்ட 102 கலை அறிவியல் கல்லூரிகள், 11 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 113 கல்லூரிகளும், 25 தன்னாட்சிக் கல்லூரிகளும் இணைவு (Affiliated)  பெற்றுச் செயல்பட்டுவருகின்றன.

இக்கல்லூரிகளில் விமானப்படை நிர்வாகக் கல்லூரி ஒன்று, மூன்று பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு மையம் ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றன. இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு துறைகளிலான முதுநிலைப் பட்டப்படிப்புகளில் (Post Garduate) 20172018ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முதுநிலைப் பட்டப்படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் முதுநிலைப் பட்டப்படிப்புகள், தொழிற்பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகளில் சில படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை (Direct Admission), சில படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு வழியிலான மாணவர் சேர்க்கை (Admissions by Entrance Test Courses) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

நேரடிச் சேர்க்கைப் படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் படிப்புகளில் M.Sc (Applied Mathematics / Statistics / Statistics with Computer Applications / Electronics & Instrumentations / Bio Informatics / Bio Chemistry / Computer Science / Information Technology / Data Analytics / Environmental Sciences / Econometrics / E- Learning Technology / Applied Psychology / Textile and Apparel Design / Human Genetics & Molecular Biology) எனும் 15 வகையான அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளும், M.Com (Finance and Computer Applications / Finance and Accounting) எனும் இரண்டு வணிக
வியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளும், M.Ed எனும் ஒரு முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பும், M.A (Tamil / Linguistics / Economics / History / Sociology / Women Studies / Career Guidance) எனும் 7 வகையான கலை முதுநிலைப் பட்டப்படிப்புகளும், M.S.W எனும் ஒரு சமூகப் பணி முதுநிலைப் பட்டப்படிப்பும், M.Lib.I.Sc எனும் ஒரு நூலகத் தகவல் அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்பும் என மொத்தம் 27 வகையான முதுநிலைப் பட்டப்படிப்புகள் நேரடிச் சேர்க்கைப் படிப்புகளாக உள்ளன.

B.Voc (Business Process Service & Data Analysis / Multimedia & Animation) எனும் இரண்டு இளநிலைத் தொழிற்பட்டப்படிப்புகளும், P.G. Diploma in (Nanoscience & Techonology / Cheminformatics / Environmental Education / Educational Administration / Cyber Security  Software Testing / Women Entrepreneurship) எனும் ஆறு வகையான முதுநிலைப் பட்டயப் படிப்புகளும், Diploma in Vivekanantha Thoughts எனும் ஒரு பட்டயப்படிப்பும், Certificate in Vivekanantha Thoughts எனும் ஒரு சான்றிதழ் படிப்பும் நேரடிச் சேர்க்கைப் படிப்புகளாக இருக்கின்றன.

நுழைவுத்தேர்வு வழிச் சேர்க்கைப் படிப்புகள்: இப்பல்கலையில் இடம்பெற்றிருக்கும் பட்டப்படிப்புகளில் M.Sc (Mathematics / Physics / Medical Physics / Nanoscience and Technology / Chemistry / Zoology / Botany / Bio Technology / Industrial Bio Technology) எனும் ஒன்பது அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்பு
களும், M.A (English Literature), Master of Journalism and Mass Communication, B.P.Ed. M.P.Ed., M.C.A (Lateral Entry) படிப்புகள் நுழைவுத்தேர்வு வழியிலான சேர்க்கைப் படிப்புகளாகவும் இருக்கின்றன.

கல்வித்தகுதி: மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்கும் தேவையான கல்வித்தகுதி மற்றும் ஒவ்வொரு படிப்புக்குமான இடங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள இப்பல்கலைக்கழகத்தின் www.b-u.ac.in எனும் இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்குமான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக அலுவலகத்தில் கிடைக்கின்றன.

விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினர் ரூ.300, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.150 “The Registrar, Bharathiyar University” எனும் பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலை பெற்று நேரில் கொடுத்தோ அல்லது அஞ்சல் வழியில் கடிதம் ஒன்று இணைத்து வேண்டியோ பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வழியில் விண்ணப்பம் வேண்டுவோர் ரூ.60 மதிப்பிலான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையினை இணைக்க வேண்டும்.

மேற்காணும் முகவரியிலான இப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் விண்ணப்பம் இடம்பெற்றிருக்கிறது. இந்த விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்திற்கான வங்கி வரைவோலை இணைத்து விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பியும் வைக்கலாம். ஆன்லைனிலும்  விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நிலையில், விண்ணப்பக் கட்டணத்தை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏதாவதொரு வழிமுறையைப் பின்பற்றிச் செலுத்த
வேண்டும்.இணையம் வழியில் விண்ணப்பிக்கவும், நிரப்பப்பட்ட விண்ணப்பம் அலுவலகத்தைச் சென்றடையவும் கடைசி நாள்: 22.5.2017. 

மாணவர் சேர்க்கை முறை: தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, நேரடிச் சேர்க்கைக்கான படிப்புகளுக்கு, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வித்தகுதியுடைய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டும், நுழைவுத் தேர்வு வழியிலான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கல்வித்தகுதிக்கான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் பட்டப்படிப்புகளில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கல்விக் கட்டணம், விடுதி வசதிகள் போன்ற கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது பல்கலைக்கழக அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது பல்கலைக்கழக அலுவலகத்தின் 0422 - 2428115 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம்.

 - தேனி மு. சுப்பிரமணி