மர்மம் இருக்கே!
‘மழை நாட்களின் ஹீரோக்கள்’ கட்டுரை, மனிதநேயப் பண்பாளர்களை பாராட்டிய அதே நேரம், மனிதப் போர்வையில் நடமாடி வரும் மிருகங்களுக்குப் பாடமும் புகட்டியிருந்தது! - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
பார்வதி நாயரின் போட்டோக்கள்தான் ரொமான்ட்டிக் என்றால் அவர் கைப்பட வரையும் ஓவியங்களும் ரொமான்ட்டிக்கா? ஃபென்ட்டாஸ்டிக்! - ஜெ.வி.குமரேசன், தஞ்சாவூர்.
பீகாரில் நிதிஷ்குமார் முதல்வராகும்போதெல்லாம் அனில் ஷர்மா என்பவர் தன் விரலை வெட்டிக்கொள்வது மூடத்தனத்தின் உச்சம்! இன்னுமா இப்படி? வெட்கக் கேடு! - டி.வி.கோமதி சந்திரன், காங்கேயம்.
‘எந்திரன் 2’ படம் பற்றி புள்ளிவிவரங்களுடன் தகவல் கொடுத்து ரஜினி பிறந்தநாள் ட்ரீட்டை ரசிகர்களுக்குக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி! - எஸ்.காதர், கோயம்புத்தூர்.
உடலில் இல்லாத திடத்தை மனதில் கொண்டு மகத்துவமாய் வாழும் ‘மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி’ மனிதர்களைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தது. - எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்-2.
அமைதிப் புறாவாக இருந்த தமன்னா, ‘தோழா’ பட ஷூட்டிங்கில் குறும்புக்கார புள்ளிமானாக துள்ளி வருகிறாரா? இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கே! - கே.எல்.பால்பாண்டி, திருப்பூர்.
வானிலை ரமணனுக்கு சிங்கம் சூர்யா வேடம் கச்சிதம். வருணன், ரமணன் மீட்டிங் குபீர் சிரிப்பு. மொத்தத்தில் இந்த வார ‘வலைப்பேச்சு’ வாவ்! - பி.பன்னீர்செல்வம், மதுராந்தகம்.
130 ரூபாயோடு சென்னைக்கு வந்து உழைத்து ஜெயித்த நடிகர் பிரகாஷ்ராஜ், இன்று ஒரு கிராமத்தைத் தத்தெடுத்திருப்பது ‘கிரேட்’! இது பெருமையல்ல... கடமை என்றது பொருத்தமான பன்ச்! - மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
செம்மஞ்சேரி குடியிருப்புவாசிகளின் வாழ்வு மனதைப் பிசைந்தது. ‘‘இங்கே உள்ளே யாரும் வர்றதில்ல... கால்ல ஒட்டிக்குமில்ல!’’ எனும் வரிகள் பளார் பளார்! - சு.சுந்தரவடிவு, மதுரை.
‘சிம்பு முதல் மூணு இடத்திற்குள் வரணும்’ எனும் கௌதம் மேனனின் ஆதங்கம் மிகச் சரியே! ஆனால், உணர வேண்டிய சிம்பு... பல நேரங்களில் ‘தெம்பாக’ வலம் வருவதில்லையே! - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
‘கல்யாணத்தை மட்டுமல்ல, கல்யாணத்திற்குச் செல்வதையும் தங்க நகைகள்தான் தீர்மானிக்கின்றன’ என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் செம ‘நச்’! - இரா.குணசேகரன், சிதம்பரம்.
|