JOKES
‘‘அந்த ஹோட்டல் பாத்ரூம்ல கேமரா இருக்குன்னு எப்படிச் சொல்றீங்க..?’’ ‘‘நான் வழுக்கி விழுந்ததும், அவங்களே டாக்டரை அனுப்பிட்டாங்களே!’’ - அ.ரியாஸ், சேலம்.
‘‘நாலு பேருக்கு சந்தோஷம்னா எது வேணா பண்ணலாம்...’’ ‘‘அப்படின்னா பொதுக்கூட்டத்தை ரத்து பண்ணிடுங்க தலைவரே!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி
‘‘உங்க வீட்ல திருடினவன் இவனுங்கள்ல யாருன்னு அடையாளம் காட்டும்மா...’’ ‘‘ஏன் சார்... திருட்டு போனதைக் கண்டுபிடிக்கப் போறீங்களா?’’ ‘‘இல்லம்மா, எங்களுக்கு இன்னும் மாமூல் வந்து சேரல!’’ - சரவணன், கொளக்குடி.
‘‘தலைவர் பின்னால 10 பேர்தான் நிக்கறாங்க... ஆனா ‘என் பின்னால கட்சியே நிக்குது’ன்னு பேசறாரே?’’ ‘‘உண்மையைத்தானே பேசறார்... நம்ம கட்சியில இருக்கறது அந்த 10 பேர்தானே..?’’ - கே.ஆனந்தன், பே.தாதம்பட்டி.

‘‘ஏன்டி! இன்னிக்கு சமையல் ஒரே உப்பும் காரமுமா வாயில வைக்க முடியாதபடி இருக்கே... என்ன விஷயம்?’’ ‘‘உங்க அம்மா வர்றதா சொன்னாங்க. அதனால்தாங்க!’’ - ஆர்.நெடுஞ்செழியன், பருத்திச்சேரி.
தத்துவம் மச்சி தத்துவம்
சைக்கிளைக் கண்டுபிடிச்சது, காரைக் கண்டுபிடிச்சது, ரயிலைக் கண்டுபிடிச்சது, ஏன்... விமானத்தைக் கண்டுபிடிச்சது எல்லாம் வேற வேற ஆளா இருந்தாலும், இது எல்லாம் தொலைஞ்சு போயிட்டா அதை கண்டுபிடிக்கிறது போலீஸ்தானே! - ஜி.தாரணி, மதுரை.
என்னதான் கொண்டைக்கடலையில் கொண்டை இருந்தாலும், அந்தக் கொண்டையை சீவி சிங்காரிச்சு பூவெல்லாம் சுற்ற முடியாது! - கொண்டையை வைத்து மண்டையைப் பிய்த்து கிண்டல் சுண்டல் சமைப்போர் சங்கம் - என்.கஜேந்திரன், நிரவி.
|