கபாலிக்காக வெயிட்டிங்!



இந்த டிசம்பரிலிருந்து ராதிகா ஆப்தேவுக்கு வசந்தம் தொடக்கம். ‘கபாலி’க்காக மலேசியா பறக்கப் போகிறது பொண்ணு. ‘‘ரஜினி சாரை சந்திக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். அவர் படங்களில் நடிக்கவே பலத்த போட்டி இருக்கும்.

எனக்குக் கிடைச்சது ரொம்ப அரிதான சான்ஸ். இந்தப் படத்தின் கதை வித்தியாசமானது. சும்மா டான்ஸ் ஆடிட்டுப் போற கேரக்டரா இருந்தாலும் இந்தப் படத்தில் நான் நடிச்சிருப்பேன். ரஜினி சாரோட நடிக்கறதே அதிர்ஷ்டம். ஆனா, அந்த அதிர்ஷ்டத்தோடு சேர்த்து, நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டரும் இதில் அமைஞ்சிருக்கு!’’ - ஆச்சரியத்தில் இருந்து இன்னமும் மீளாத ராதிகா ஆப்தேவின் ரவா லட்டு டீடெயில்ஸ் இனி...

படிப்பு: எகனாமிக்ஸ் அண்ட் மேத்ஸ்
நடிக்க வருவதற்கு முன்: தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்

பிடிச்சதில் டாப் 5: லண்டன், கதக், ஏ.ஆர்.ரஹ்மான், பியானோ,  பிரியாணி

சாதனை: லண்டனிலும், வாரணாசி யிலும் கான்டம்பரரி டான்ஸ் கற்றுக்கொண்டது!

அறிமுகம்: இந்தியில் ‘வா! லைஃப் ஹே தோ எய்சி’

தெலுங்கில்: ‘ரக்த சரித்ரா’

அப்பா: டாக்டர் சாரு தத், நியூரோ சர்ஜன்

பூர்வீகம்: புனே

உயரம்: 5’ 2’’

தாய்மொழி: மராத்தி

ஹேப்பி பர்த் டே: செப்டம்பர் 7

தமிழில் நடிக்க வந்தது எப்படி?:

இந்தி, தெலுங்கில் பார்த்து பிரகாஷ்ராஜ் சார் ‘தோனி’க்காக அழைத்து வந்தார். தமிழில் அறிமுகப் படம் என்றாலும், ‘தோனி’ என் 15வது படம்!

இந்தியில் கிளாமரா நடிச்சது ஏன்?: நடிக்க வந்த பிறகு, ‘அப்படி நடிக்க மாட்டேன்... இப்படி நடிக்க மாட்டேன்...’ என பாலிஸி வைத்திருப்பது தப்பு என்றுதான்
சொல்வேன்!

பிரகாஷ்ராஜ்?: ‘தோனி’யில் என் டயலாக்குகளின் அர்த்தங்களைச் சொல்லி புரிய வைத்தவர். வெரி சென்ஸிடிவ்!

பா.ரஞ்சித்: திறமையான இயக்குநர் அவர்!

பிடிச்ச ஹீரோ: இந்தியில் அமீர்கான், தமிழில் ரஜினி, மலையாளத்தில் பஹத் பாசில்.

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சாமே?:

 பர்சனல் லைஃப் வேணாமே... ப்ளீஸ்!

ரஜினி: மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி!

எரிச்சல்...: பர்சனல் பத்தி கேட்டா பிடிக்காது!

ஹாபி: கார்டனிங். எங்க வீட்ல அழகான தோட்டம் இருக்கு. செடி கொடிகளுடன் மனம் விட்டுப் பேசுவது பிடிக்கும்!

ரிலாக்ஸ் ஸ்பாட்: அழகான காடுகள்... நான் ட்ரெக்கிங் பிரியை!
சொல்ல விரும்புவது: ‘கபாலி’க்காக வெயிட்டிங்!

- மை.பாரதிராஜா