நல்ல பையன்!



‘எத்தனை பேருக்கு இப்படி ஒரு எவர்சில்வர் அம்மா கிடைக்கும்?’ என்கிற நா.முத்துக்குமாரின் வரிகளைக் கடக்கும்போது, வலியால் நிரம்பிய நெஞ்சம் விழிவழி வெளியேறுகிறது.
- கோ.பகவான், திருத்தணி.

தீபா சன்னிதி கவர்ச்சியில்தான் புயல் என்று நினைத்தால் கவிதையிலும் புயலாக இருக்கிறாங்களே... அவரின் கவிதை வரிகள் அவர்
ப்ளோ அப் படங்களைப் போலவே ஜொலித்தன!
- டி.ஸ்டீபன் சார்லஸ், நாகை.

‘தீபாவளி கொண்டாட்டம் சினிமா ஸ்பெஷல்’ இதழ் முழுவதும் சினிமா வாசனைதான் போங்க. அதுவும் மல்லுவுட், டோலிவுட், பாலிவுட் நடிகைகளின் லிஸ்ட்... பெஸ்ட்!
- ஆர்.கார்த்திகேயன், திருப்பூர்.

ஆறாம் வகுப்போடு படிக்க முடியாமல் போன ‘புதுக்கோட்டை’ கணேசன், தன் முடி திருத்தும் கடையை ஒரு இலக்கியக் கூடமாக்கி வைத்திருப்பது அபாரம். நமக்குப் பாடம்!
- நெ.இந்திராணி குமார், புதுச்சேரி.

நாஞ்சில் நாடன் குறிப்பிடுவது போல், பேய்களுக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்த்தால், அழுக்கேறிக் கிடக்கிற சமுதாயம் நிச்சயம் வெளுக்கலாம்.
- கே.வீரமணி, தஞ்சாவூர்.

‘தீபாவளி செலவைக் குறைப்பது எப்படி?’ என்பதைப் படித்ததும் தலையே சுத்திடுச்சு சாமி! நல்லவேளை, ‘கண்டிப்பாக இந்த யோசனையைக் கடைப்பிடிக்க வேண்டாம்’ என்று டைட்டிலிலேயே போட்டீங்க!
- பி.கே.சபரிநாதன், விருதுநகர்.

பிரபலங்கள், அறிஞர்களின் மூன்று லட்சம் புகைப்படங்களை தேடிச் சேகரித்து வைத்திருக்கும் ‘போட்டோ’ ஞானம் பற்றிய கட்டுரை புதுசு... மலைக்க வைக்கும் தினுசு!
- எஸ்.ஆர்.புவனா சுந்தர், காங்கேயம்.

கண்ணதாசனின் வைர வரிகளால் தற்கொலை எண்ணத்தை விட்ட மனோபாலா, ‘பிள்ளை நிலா’ படத்தில் இருந்து விஸ்வரூபம் எடுத்த கதை ஒவ்வொரு உள்ளத்துக்கும் ஊக்குவிப்பு டானிக்!
- டி.வி.கோமதி குமரேசன், சென்னை-34.

‘ஆகாயம் கனவு அப்துல் கலாம்’ தொடர் ராக்கெட் வேகத்தில் செல்கிறது. இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு நமது முன்னோர்கள் போட்ட விதை பிரமிப்பூட்டுகிறது!
- சி.பி.அருணகிரி, விழுப்புரம்.

‘தரை லோக்கல் பையனாக’ இறங்கி பேட்டி தந்திருக்கும் கார்த்தியின் உண்மை உள்ளம் வரிக்கு வரி பளிச்சிட்டது. லோக்கல் பையனா இருந்தாலும் நல்ல பையன்பா!
- ஜே.வல்லரசு, தேனி