ஜோக்ஸ்



‘‘குற்றப் ‘பத்திரிகை’ படிச்சதை தலைவர் இப்படிச் சொல்லக்கூடாது..!’’
‘‘அப்படி என்ன சொன்னார்?’’
‘‘ஜர்னலிசம் படிச்சேன்னு சொல்றாரே..!’’
- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

‘‘நாளை என்பது நம்ம கையில இல்லை...’’
‘‘இன்னிக்கே என் கையில எதுவும் இல்லை டாக்டர்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘போன்ல பேசும்போது உங்க சம்சாரத்துக்கு கைரேகை பார்க்கணும்னு சொன்னீங்க... இப்ப அவங்களைக் கூட்டிட்டு வராம நீங்க மட்டும் தனியா வந்து இருக்கீங்களே..?’’
‘‘என் கன்னத்துல அவ கைரேகை பதிஞ்சிருக்கு... அதைப் பார்த்து சொல்லுங்க ஜோசியரே!’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

‘‘எதுக்காக கிளினிக்ல தாரை, தப்பட்டைனு ஒரே அமர்க்களமா இருக்கு?’’
‘‘ரொம்ப நாள் கழிச்சு, ஒரு பேஷன்ட் ஆபரேஷனுக்கு ஒத்துக்கிட்டாராம்...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘தலைவர் பிழைக்கத் தெரிஞ்சவர்...’’‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘அவர் மேல செருப்பு வீச டோக்கன் போட்டு சம்பாதிக்கிறாரே!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் பேய்ப் படம் என்றாலும் அதை நாம்தான் பார்க்க வேண்டும். பேயெல்லாம் வந்து பார்க்காது!
- பேய் என்ற பேரைக் கேட்டாலே பயந்தோடும் பயந்தாங்கொள்ளிகள் சங்கம்
- என்.கஜேந்திரன், காரைக்கால்.

கடைக்குப் போய் 22 சட்டை வாங்கினா, எண்ணிப் பார்க்கலாம். 22 பழம் வாங்கினால் அதை எண்ணிப் பார்க்கலாம். அவ்வளவு ஏன், 22 ரூபாய் வாங்கினாகூட அதையும் எண்ணிப் பார்க்கலாம். ஆனா 22 காரட் தங்க நகை வாங்கினா அதை எண்ணிப் பார்த்து வாங்க முடியுமா?
- ஜி.தாரணி, மதுரை.