ஜோக்ஸ்
‘‘குடியை மறக்கத்தான் மருந்து கொடுத்தேனே... அப்புறம் என்ன?’’ ‘‘டாக்டர்! ஊறுகாயை மறக்க மருந்து இருக்கா..?’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘உங்க பையன் பிளஸ் 2வே இன்னும் பாஸ் பண்ணலைன்னு சொன்னீங்க... அப்புறம் எப்படி ஜட்ஜ் ஆனான்?’’ ‘‘ஹி... ஹி... லோக்கல் டி.வி.ல டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா இருக்கான்ங்க!’’ - கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
‘‘வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?’’ ‘‘உங்க வாட்ஸ்அப் குரூப்ல என்னையும் சேர்த்துக்குங்க எஜமான்!’’ - அம்பை தேவா, சென்னை-116.
‘‘என்னோட பார்வை ரொம்ப மங்கிடுச்சுன்னு எதை வச்சு சொல்றீங்க டாக்டர்..?’’ ‘‘நர்ஸ்னு நினைச்சு நேத்து வார்டு பாய் கையைப் பிடிச்சு இழுத்திருக்கீங்களாம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
தத்துவம் மச்சி தத்துவம்
எந்தப் பொருளா இருந்தாலும் சரியா கிடைக்கலைன்னா ‘தட்டு’ப்பாடு வந்துடுச்சுன்னுதான் சொல்லமுடியும். ‘டம்ளர்’பாடு, ‘கரண்டி’பாடு, ‘குடம்’பாடு, ‘அண்டா’ பாடு, ‘தாம்பாளம்’ பாடு வந்துடுச்சுன்னு சொல்ல முடியாது! - கட்டுப்பாடு இல்லாமல் தத்துவம் சொல்லி அசத்துவோர் சங்கம் - ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
உலகத்திலேயே நம்பர் 1 ஓட்டப்பந்தய வீரரா இருந்தாலும், தூக்கத்திலே நடக்கிற வியாதி வந்துட்டா அவரும் நடந்துதான் போகணும். தூக்கத்திலே ஓட முடியாது. - பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்து விட்டு தூக்கத்தில் கூட ஓடுவோர் சங்கம் - மு.மதிவாணன், அரூர்.
‘‘அதோ போறவரைக் கையைத் தட்டிக் கூப்பிடு...’’ ‘‘நான் பொதுக்கூட்டத்தில கை தட்டறவன். ஒரு தடவை கை தட்டிக் கூப்பிட அம்பது ரூபா ஃபீஸ் ஆகும்... சம்மதமா?’’ - ஏ.நாகராஜன், சென்னை-75.
|