திறமைசாலி புத்திசாலி தைரியசாலி!
பருப்புகளின் ராக்கெட் வேக விலை உயர்வால் பாக்கெட் காலியாகி நிற்கும் பொதுஜனத்துக்கு ‘பருப்பு இல்லாமல் சமைக்க முடியாதா?’ கட்டுரை ஸ்பெஷல் ட்ரீட்! - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
‘வீரு’ கொண்டு எத்தனையோ ஆட்டங்களில் பல நாட்டு பௌலர்களை துவம்சம் செய்த வீரேந்திர சேவக்கின் ஓய்வுக் காலம் அற்புதமாக அமைய வாழ்த்துகள்! - கோ.சு.சுரேஷ், கோவை.
ஒவ்வொரு வாரமும் ‘சஸ்பென்ஸோடு’ முடியும் மனோபாலா தொடர், அடுத்த வார ‘குங்குமம்’ இதழை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது! - எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.
கவிஞர் நா.முத்துக்குமாரின் ‘நினைவோ ஒரு பறவை’ பகுதி எது மாதிரியானதோ என்கிற ஆவல் மனத்தில் நிரம்பி வழிகிறது! - கோ.பகவான், பொம்மராஜுப்பேட்டை.
விஷால் ரொம்ப திறமைசாலி, புத்திசாலி என்று தைரியசாலியான ஸ்ருதி சொல்கிறார். ‘அனுபவசாலி’யான அவர் அப்பாவுக்கு இது புரியாமலா போய்விடும்! - மு.மதிவாணன், அரூர்.
அந்தக் காலம் தொட்டு அபார்ட்மென்ட் காலம் வரை, மூன்று தாய்ப் பிள்ளைகளும் ஒற்றுமையாய் வாழும் கொத்தமங்கலம் சுப்பு குடும்பத்தினருக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க! - சிவமைந்தன், சென்னை-78.
‘அரேஞ்சுடு விவாகரத்து’ - ஏதோ வித்தியாசமான கதை என்று பார்த்தால், அப்புறம்தான் தெரியுது நையாண்டி. ஆனாலும் அந்தப் படம் எடுத்தவனுக்கு ரொம்பத்தான் குசும்பு! - மயிலை.கோபி, சென்னை - 83.
குடும்பப் பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இன்றைய டி.வி சீரியல்கள் பற்றி குறிப்பிட்ட ஆதங்கம் அனைத்தும் நியாயமானதே. இன்றைய படைப்பாளிகளுக்கு பொறுப்பு வேண்டும்! - எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை.
‘பசங்க-2’ படம் சூர்யா படம் அல்ல, குழந்தைகள் படம் என்பதை ‘ஹைக்கூ’ கவிதை போல் ‘நச்’சென்று சொல்லிவிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்! - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
‘ஆம்னி பஸ் திருட்டு... அந்தரங்க போட்டோ மிரட்டல்’ கட்டுரையில் மோசடிகள் குறித்த விழிப்புணர்வினை அறிவுறுத்திய ரகுநாதனுக்கு எங்களது நெஞ்சார்ந்த ஆயிரம் நன்றிகள்! - கே.எஸ்.குமார், விழுப்புரம்.
|