ஜோக்ஸ்
‘‘அது என்ன புதுசா ‘மிஸ்டு கால்’ பட்டாசு..?’’‘‘பட்டாசுல ஒரு நம்பர் எழுதி இருக்கும். அந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்... பட்டாசு அதுவாவே வெடிச்சிடும்!’’
‘‘தலைவர் சீக்கிரமே கட்சி தாவப் போறார்னு எப்படிச் சொல்றே..?’’‘‘அவர் விடுற ராக்கெட் வெடி எல்லாம் கரெக்டா எதிர்க்கட்சி ஆபீஸ் வாசல்ல போய் விழுது பாரு!’’
‘‘என்னய்யா, என்னோட படம்தான் இந்தத் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலையே! அப்புறம் ஏன் ரசிகர்கள் என் வீட்டு முன்னால பட்டாசு வெடிச்சி அமர்க்களம் பண்ணிட்டு இருக்காங்க..?’’ ‘‘அதுக்காகத்தானாம் சார்..!’’
‘‘கங்கா ஸ்நானம்’ ஆயிடுச்சானு கேட்டா, ‘யமுனா ஸ்நானம்’ ஆயிடுச்சுன்னு சொல்றியே ஏன்...?’’ ‘‘ஹி...ஹி... யமுனா, என் பொண்டாட்டியோட தங்கச்சி!’’
‘‘52 வாரம் ஓடிடுச்சு மாப்ளே...’’ ‘‘எந்தப் படம்? அவ்ளோ சூப்பர் ஹிட்டாவா ஓடியிருக்கு மாமா..?’’ ‘‘அட, போங்க மாப்ளே... போன தீபாவளில இருந்து இந்தத் தீபாவளி வரைக்கும் நீங்க அவ்ளோ நாள் நம்ம வீட்ல தங்கி இருக்கீங்கனு சொல்ல வந்தேன்...’’
ஸ்பீக்கரு...
‘‘இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய ‘லட்சுமி வெடி’யையே வெடித்துக் கொண்டிருப்பீர்கள்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புத்தம் புதிய ‘ராய் லட்சுமி வெடி’, ‘லட்சுமி மேனன் வெடி’ போன்றவற்றை அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்...’’
‘‘கட்சி தாவுற அரசியல் வாதிகளைப் பார்த்து உங்க மாப்பிள்ளை கெட்டுப் போயிட்டார்னு ஏன் சொல்றீங்க...?’’‘‘தலை தீபாவளிக்கு இன்னோவா கார் கொடுத்தாதான் வீட்டுக்கு வருவேன்னு அடம் பிடிக்கிறாரு!’’
கே.லக்ஷ்மணன்
|