நான் கடவுள் ஓவியர்!
star ஹாபி
கலக்கும் ஹன்சிகா
நமக்கு நன்கு தெரிந்த வி.ஐ.பிகள்தான். ஆனால், நாம் அறியாத பக்கங்கள் அவர்கள் வாழ்வில் உண்டு. அதை அவர்களே பகிர்ந்துகொள்ளும் பகுதி இது!
‘‘மும்பைக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து பிஸியா நடிச்சிட்டிருக்கும் எனக்கு பெரிய ரிலாக்ஸ் கொடுக்கறது நான் வரையுற ஓவியங்கள்தான். அதனாலதான் ஸ்ட்ரெஸ் இல்லாம, எப்பவும் ஹேப்பியா என்னால இருக்க முடியுது.
நான் பார்ட்டி பொண்ணு இல்ல. ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல எங்கேயாவது பார்ட்டி போறதோ, ஃபாரீன் டூர் போறதோ எனக்கு விருப்பமான விஷயங்கள் இல்லை. வீட்ல பெயின்டிங்தான் என் உலகம். ஐ லவ் பெயின்டிங்ஸ்!’’ - செம எனர்ஜியுடன் ஃபீல் ஆகிறார் ஹன்சிகா. உதயநிதி, ஜீவா, சித்தார்த் என கைவசம் நாலு படங்கள் வைத்திருக்கும் பிஸி ஹீரோயின்!
‘‘எங்க அப்பா பிரதீப் மோத்வானி பிசினஸ்மேன். அம்மா மோனா மோத்வானி டெர்மடாலஜி டாக்டர். ஒரே ஒரு அண்ணன் பிரஷாந்த் மோத்வானி. இவ்வளவுதான் என் ஃபேமிலி. இன்டர்நேஷனல் ஸ்கூல்லதான் படிச்சேன். சின்ன வயசில இருந்தே, ஓவியங்கள் வரையறதுல ஆர்வம் அதிகம். நான் வரைஞ்ச முதல் ஓவியம் நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ நான் ரெண்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன்.
அழகான ஒரு சிங்கத்தை வரைஞ்சேன். மிஸ் கூட அதைப் பாராட்டினாங்க. அப்புறம் சின்ன வயசுலயே ஆக்ட்டிங் ஃபீல்டுக்கு வந்துட்டேன். ‘ஜாகோ’னு இந்திப் படத்துல மனநிலை பாதிக்கப்பட்ட பத்து வயசு குழந்தையா நடிச்சிருக்கறது நான்தான். இந்தி, தெலுங்கு, தமிழ்னு எல்லா லாங்குவேஜ்லயும் நான் பிஸியா இருக்குறப்போ, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க இந்த ஓவியங்கள்தான் எனக்கு உதவுச்சு. ஒரு விஷயத்தை நாம நேசிச்சா,
அதுவே நம்மளை அப்டேட் பண்ண வைக்கும்னு சொல்வாங்க. சின்னச் சின்னதா பேப்பர்ல வரைஞ்ச நான், என்னோட தனிப்பட்ட இன்ட்ரஸ்ட்னால இப்போ பென்சில் டிராயிங், ஷேட்ஸ், வாட்டர் கலர், ஆயில் கலர், அப்ஸ்ட்ராக்ட் பெயின்டிங்ஸ், கேரிகேச்சர்ஸ்னு எல்லா விதமான பெயின்டிங்கு களையும் வரைய ஆரம்பிச்சிட்டேன். ஆனா, முறைப்படி யார்கிட்டேயும் கத்துக்கல.
என்ன பெயின்ட் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு வரைய முடியாது. அந்தந்த மனநிலையைப் பொறுத்து வரைவேன். கடவுள் படங்கள் வரையறது ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, விநாயகர் படம் வரையறது இஷ்டம்.
அது ரொம்ப ஈஸியும் கூட. ராதையுடன் கிருஷ்ணர் இருக்கும் காட்சிகளை அடிக்கடி வரைவேன். உங்க ரோல் மாடல் ஓவியர்கள் யாரெல்லாம்னு கேட்டா, எனக்கு அதைப் பத்தி நோ ஐடியா. லேட்டஸ்ட்டா ஒரு சிவன் படம் வரைஞ்சேன். சின்னதா ஹாபியா தொடங்கினது இப்போ பெரிய ஆர்வமா வளர்ந்திருக்கு.
இதுவரை நூறு பெயின்டிங்ஸ்க்கு மேல வரைஞ்சிருப்பேன். ஆனா, இந்த வருஷம் வரைஞ்ச பெயின்டிங்ஸ் ரொம்பக் கம்மி. போன வருஷம் என்னோட ஓவியங்கள் எல்லாத்தையும் சின்னதா ஆர்ட் கேலரியில எக்ஸிபிஷன் வச்சிருந்தேன். அதுல ஒரு ராதை கிருஷ்ணா பெயின்டிங்கை என்னோட ரசிகர் ஒருத்தர், 15 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அது எனக்கு செம என்கரேஜிங்கா இருந்தது. அந்தப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக கொடுத்துட்டேன்.
என் பெயின்ட்டிங்ஸ்க்கு முதல் ரசிகை எங்க அம்மா. வீட்ல என்னை செல்லமா ‘மோத்’னு சொல்வாங்க. நான் என்ன வரைஞ்சாலும் என்கரேஜ் பண்ணுவாங்க. ‘சிங்கம் 2’ல சூர்யா சார் கூட நடிக்கும்போது, அவங்க அப்பா சிவக்குமார் சார் கிரேட் பெயின்டர்னு கேள்விப்பட்டேன். அவங்கள மாதிரியெல்லாம் என்னால வரைய முடியாது. சினிமாதான் என்னோட மெயின் கேரியர். ஓவியம் வரையறது ஜஸ்ட் ஒரு ஹாபிதான். பட், நான் நேசிக்கிற ஹாபி!’’
- மை.பாரதிராஜா
|