success மொழிகள்!



தன் மனைவி செலவு செய்யும் அளவுக்கு பணம் சம்பாதிப்பவனே வெற்றிகரமான ஆண். அப்படிப்பட்டவனைக் கண்டுபிடிப்பவளே வெற்றிகரமான பெண்!
- ஹாலிவுட் நடிகை லானா டர்னர்

தன் மேல் எறியப்படும் ஒவ்வொரு கல்லையும் பயன்படுத்தி தன் அஸ்திவாரத்தைக் கட்டமைப்பவனே வெற்றிகரமான மனிதன்!
- அமெரிக்க டி.வி பிரபலம் டேவிட் பிரிங்க்லே

பெரும்பாலும் வெற்றி என்பது சரியான திசையில் தவறுதலாகப் பயணித்துவிடுவதே!
- விளையாட்டு
வர்ணனையாளர் அல் பெர்ன்ஸ்டைன்

இந்த உலகில் மனிதர்கள் தமக்கு வேண்டியதை அடைவதற்காக எதையும் செய்யத் தயார். ஆனால் தனக்கு எது வேண்டும் என்பது யாருக்கும் தெரிவதில்லை!
- எழுத்தாளர் டான் மார்க்கஸ்

வெற்றி என்பது மனைவிக்கு டிரைவிங் சொல்லிக்கொடுப்பது மாதிரி. என்றைக்காவது அது உங்களை காவல் நிலையத்தில் கொண்டு போய் விடும்!
- அமெரிக்க
காமெடியன் ஃப்ரெட் ஆலன்

நாம் அதிர்ஷ்டத்தை நம்பியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், நமக்குப் பிடிக்காதவரின் வெற்றியை எப்படி விவரிப்பது?
- ஜீன் காக்டுரன்

ஆரவாரமான வெற்றியை வெறும் ஆரவாரம் செய்வதால் பெற முடியாது!
- பாப் ஹாரிங்டன்

உங்களால் நன்றாகச் செய்ய முடியும் என்ற செயலை மட்டும் செய்துவிட்டு மற்றதை மற்றவர்களிடம் விட்டுவிடுவதே வெற்றியின் ரகசியம்!
- கோல்ட்ஸ்டெயின் எஸ்.ட்ரூயிஸம்

எல்லோருமே வெற்றியை விரும்புகிறார்கள். ஆனால் வெற்றியாளர்களை வெறுக்கிறார்கள்!
- முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ

வெற்றி என்பது ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்விக்கு
மனமுடையாமல் பயணிப்பது!
- வின்ஸ்டன் சர்ச்சில்

பெரும்பாலும் மனிதர்கள் தங்கள் முதல் மனைவிக்குப் பரிசாக வெற்றியைத் தருகிறார்கள். அந்த வெற்றிக்குப் பரிசாக இரண்டாவது மனைவியை எடுத்துக்கொள்கிறார்கள்!
- ஹாலிவுட் டப்பிங் கலைஞர் ஜிம் பேக்கஸ்

கீழே இருப்பவர்கள் உயரத்தை அடைகிறார்கள். உயரத்தில் உள்ளவர்கள் உயரம் என ஒன்று இல்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்!
- வேளாண் தொழிலதிபர் நான்ஸி பார்கஸ்

நான் எனக்கு சந்தோஷம் தரும் செயலைத்தான் தொடர்கிறேன். அதற்குப் பரிசாக இந்த உலகம் எதை வெற்றி என்று சொல்கிறதோ
அது வந்து சேருகிறது!
- தாமஸ் ஆல்வா எடிசன்

60 ஆண்டுகளாக நான் உணவு உண்டிருக்கிறேன். யாருக்கும் உணவாகி
விடாமல் தப்பித்திருக்கிறேன். இது வெற்றி இல்லையா?
- பிரிட்டிஷ் எழுத்தாளர் லோகன் ஸ்மித்

ஒரே நாளில் ஜெயித்துக்காட்டுவதற்கு 20 வருட உழைப்பு தேவைப்படுகிறது.
- அமெரிக்கப் பாடகர் எடி கேன்டர்

நான் திரும்பத் திரும்ப வெற்றியைத் தேடி ஓட மாட்டேன். உலகிலுள்ள மற்ற விஷயங்களையும் பார்க்க விரும்புவேன்!
- வால்ட் டிஸ்னி