ஜோக்ஸ்



உங்களுக்கு நியூமராலஜியில நம்பிக்கை இருக்கலாம், அதுக்காக நான் 998வாலாவுக்கு எங்கே போறது..?’’

“என்னப்பா இது, பத்த வச்சா ராக்கெட் போகவே இல்லை..?’’
‘‘நீங்க கவுன்ட் டவுன் சொல்லியிருக்கணும் சார்..!’’

‘‘ரயில் வெடி இல்லையா..?’’
‘‘நாளைக்கு வந்து பாருங்க... நீங்க வெயிட்டிங் லிஸ்ட்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘இந்த வருடம் தீபாவளிக்கு ரஜினி படம் ரிலீஸ் ஆகாத குறையை, எங்கள் தலைவர் ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகி தீர்த்து வைப்பார் என்பதை...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

டிரஸ்ஸை எதுக்கு தம்பி போட்டோ எடுக்குறே?’’
‘‘ஃபேஸ்புக்ல போடறதுக்குத்தான். நிறைய லைக்ஸ் வந்தா இந்த டிரஸ்ஸை வாங்கிடறேன்!
- அ.ரியாஸ், சேலம்.

தீபாவளி நெருங்குது... இந்த நேரத்துல தலைவர் ஏன் கவலையா இருக்கார்?’’
‘‘சி.பி.ஐ.யும் அவரை நெருங்குதாம்...’’

தத்துவம் மச்சி தத்துவம்...

என்னதான் பட்டாசுல
‘மருந்து’  இருந்தாலும், அதை வச்சு எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!
- நர்ஸை கல்யாணம் கட்டி, தலை தீபாவளியை கிளினிக்கில் கொண்டாடுவோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.