ஜோக்ஸ்



பட்டாசுக் கடையில போய் மானத்தை வாங்கிட்டாரா தலைவர்... எப்படி?’’
‘‘பட்டாசு வாங்கிட்டு பணம் குடுக்காம இதை ‘ட்விட்டர் கணக்கு’ல வச்சுக்குங்கன்னு சொல்லியிருக்கார்!’’

‘‘தலைவர் வீட்டுல தீபாவளி அன்னிக்கு சி.பி.ஐ. ரெய்டு நடந்தும் சந்தோஷமா இருக்காரே, எப்படி?’’
‘‘அவரோட மனைவி செய்த ஸ்வீட்ஸை எல்லாம் சி.பி.ஐ. அதிகாரிங்க அள்ளிட்டுப் போயிட்டாங்க!’’

தலைவர் ஏன் அப்செட்டா இருக்கார்?’’
‘‘அவர் விரும்பி சாப்பிடற தீபாவளி பட்சணம் எதுவும் இன்னும் அவர்மேல வந்து விழலையாம்!’’

ராம் ஆதிநாராயணன் தஞ்சாவூர்

ஆச்சர்யமா இருக்கேய்யா... என் பேச்சைக் கேட்க இவ்ளோ கூட்டமா?’’
‘‘சும்மாவா தலைவரே! உங்க பேச்சை பொறுமையா உட்கார்ந்து முழுசா கேட்கிறவங்களுக்கு ‘தீபாவளி பட்டாசு பாக்ஸ்’ தர்றதா அறிவிச்சிருக்கோமே!’’

கத்தியைக் காட்டி மிரட்டின திருடன் திருடாம ஓடிட்டானா... எப்படி?’’
‘‘நான் என் மனைவி செஞ்ச தீபாவளி மைசூர்பாகைக் காட்டி விரட்டினேனே!’’

என்னப்பா இது... குண்டா ஒரு வெடியும், ஒல்லியா ஒரு வெடியும் தர்றியே?’’
‘‘அது போன வருஷ நமீதா வெடி... இது இந்த வருஷ நமீதா வெடி சார்!’’

என் மனைவி செஞ்ச தீபாவளி மைசூர்பாகை உடைக்க முடியலைய்யா!’’
‘‘அதனாலென்ன தலைவரே... எதிர்க்கட்சியை சாதுர்யமா உடைச்சுட்டீங்களே!’’