கார்த்திகாவை கடத்துவாரோ?



சட்டம் இருக்கு... ஆனால் துப்புரவுத் தொழிலாளர் துயரம் நீங்கவில்லை. இதற்குக் காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளை அந்தத் தொழிலாளர்கள் புறக்கணித்தால்தான் அவர்களுக்கு புத்தி வரும் போலிருக்கிறது!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

இந்திய நீதிமன்றங்கள் குறித்து, ‘மறுக்கப்பட்ட நீதி’ எனத் தொகுத்தளித்திருந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்! வரிகள் ஒவ்வொன்றும் ‘சம்பந்தப்பட்டவர்களை’ சவுக்கு கொண்டு சாடியிருந்தன.
- இரா.வளையாபதி, கரூர்.

விஜயகுமார்-மஞ்சுஜா, ஜெயக்குமார்- சிவகுலதேவி தம்பதிகளைப் பிணைத்து வைத்திருக்கும் அன்பு நம் மனதில் அறைகிறது. எந்திரமயமான நவீன உலகில் இதுபோன்ற நிகழ்வுகள்
அசாதாரணமானவை.
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.

விஜய்சேதுபதி பேட்டியெல்லாம் சூப்பர்தான். ஆனால் அவர் ஏங்க கார்த்திகாவை கடத்த வந்த மாதிரியே போட்டோவில் நிற்கிறார்? மனிதர் ஃபிசிக்ஸில் ஸ்ட்ராங் என்றாலும் கெமிஸ்ட்ரியில் ரொம்ப வீக் போல!
- மாணிக்கம், கோவை.

உலகமயமாக்கலை வரவேற்று, சிறு வணிகத்துக்கு உலை வைத்தது போல, இன்னொரு பரிணாம பாதிப்பாக வாகனச் சட்டம். ஆட்சியாளர்கள் அந்நியனுக்கு அடிமையாகி விட்டார்களோ?
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

சென்னைப் பெண் ராஜ ராஜேஸ்வரி நியூயார்க் குற்றவியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமையிலும் பெருமை. ஒபாமா நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு இதுபோன்ற கௌரவங்கள் தொடரட்டும்!
- வீ.வீணைநாயகி, புதுச்சேரி.

‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்தரின் தெரஸாவா இது? அடையாளம் தெரியாதபடி மாடர்ன் ஐஸ்குச்சியாகத் தெரிகிறாரே போட்டோவில். இவர் ஒரு ரவுண்ட் வருவதை யாராலும் தடுக்க முடியாது!
- கே.வி.பால்பாண்டி, திருப்பூர்.

‘செத்து செத்து விளையாடுவோமா’ என வடிவேலுவையே பந்தாடிய முத்துக்காளையைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. காமெடி யன்களுக்குத்தான் எத்தனை வலி மிகுந்த கடந்த காலம்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

பூகம்பத்தைக் கணிக்க முடியாதுதான். ஆனால், கட்டுமானப் பணிகளில் முன்னெச்சரிக்கை திட்டமிடல்களை தொழில்
நுட்பம் செய்ய வேண்டும் என்றது நெத்தியடி!
- எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை.

பத்மினியிடம் ‘உங்க சகோதரியைக் காதலித்தேன்’ என்று சாருஹாசன் தைரியமாகச் சொன்னதும் அதற்கு பத்மினி சொன்ன பதிலும் செம சுவாரஸ்யம்!
- எஸ்.வி.அருணாராணி, மதுரை.

அபிநய சுந்தரி சரோஜாதேவி பேசுவது போலவே முழுமையான ‘குட்டிச்சுவர் சிந்தனைகள்’ சூப்பர்ப்! கலக்கிட்ட்ட்ட்டீங்க கோப்ப்ப்ப்ப்பால்!
- ஆர்.வணங்காமுடி, திருச்சி.