ஜோக்ஸ்



‘‘சார், நம்ம கதையில ஹீரோ ஒரு பணக்காரன். அவனுக்கு ஹைபிரஷர் இருக்கு!’’
‘‘யோவ்! பணக்காரன்லாம் வேணாம். லோ பட்ஜெட்ல ஒரு கதை சொல்லுய்யா!’’
‘‘ஹீரோ ஏழை... அவனுக்கு லோ பிரஷர்!’’
- எஸ்.கார்த்திகேயன், கோயம்புத்தூர்.

‘‘என்னப்பா இது... நீ பாட்டுக்கு ஒவ்வொரு தோசையா கொண்டு வந்து வச்சுக்கிட்டே இருக்கே?’’
‘‘நீங்கதானே சுட சுட தோசை வேணும்னு கேட்டீங்க?’’
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

‘‘உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால், அதை என்கிட்ட சொல்லலாம்!’’
‘‘நர்ஸை லிப்ஸ்டிக் போடச் சொல்லுங்க
டாக்டர்... சூப்பரா இருக்கும்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘நிறுத்தணும்... எல்லாத்தையும் நிறுத்தணும்!’’
‘‘அதை மக்கள் உங்ககிட்ட எதிர்பார்க்கறாங்க தலைவரே!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘என்னப்பா இது... நம்ம கட்சிக் கொடி எல்லாம் அரைக் கம்பத்துல பறக்குது?’’
‘‘கொடிக் கயிறு வாங்கறதுலகூட ஊழல் பண்ணா இப்படித்தான்!’’
- ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

தத்துவம் மச்சி தத்துவம்

எலிப்பொறியில தேங்காய் வைக்கலாம்; கணிப்பொறியில வைக்க முடியுமா?
- விதம்விதமாக சிந்தித்து வீணாக காலத்தை
ஓட்டுவோர் சங்கம்
- இரா.வசந்தராசன், கல்லாவி.

என்னதான் வானிலை அறிவிப்பாளர்னாலும், அவரால
கனமழையின் கனம்
எவ்வளவுன்னு சொல்ல
முடியாது!
- தலைக்கனம் இல்லாத
உடல்கனம் கொண்டோர்
சங்கம்