‘‘நீங்க சைவமா... அசைவமா..?’’
‘‘பொதுவா சைவம். பக்கத்து
வீட்டுக் கோழி எங்க
வீட்டுக்கு வந்துட்டா
மட்டும் அசைவம்!’’
- அதிரை புகாரி,
அதிராம்
பட்டினம்.
ஸ்பீக்கரு...
‘‘அட்ரஸ், செல் நம்பர் வரை செருப்பில்
எழுதி ஒட்டி எங்கள் தலைவர் மீது தைரியமாக வீசிய அந்த வீர தீரச் செயலை வெகுவாகப் பாராட்டி அமர்கின்றேன்...!’’
- சீர்காழி ஆர்.சீதாராமன்
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் காலச்சக்கரம் வேகமா
சுழன்றாலும் அதை ஏதாவது வண்டியில மாட்ட முடியுமா?
- கால மாற்றத்தில் அலங்ேகாலமானோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘ஃபீஸ் நானூறு ரூபாய் குடுங்க!’’
‘‘ரெண்டே ரெண்டு சுமாரான நர்ஸை கண்ல காட்டினதுக்கு இது ரொம்ப அதிகம் டாக்டர்...’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.
‘‘டென்ஷன் ஆகாதீங்க தலைவரே... கட்சி ஆபீசுக்கு கார்ப்பரேஷன் குப்பை லாரி வர்றதுக்கும் நீங்க அறிக்கை விடறதுக்கும் சம்பந்தமே இல்லை!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘மொட்டை
மாடியில
படுக்கப்
போறேன்னு
ஃபேஸ்புக்ல
ஸ்டேட்டஸ்
போட்டது தப்பாப்
போச்சு...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘25 கொசுக்கள் அதுக்கு
‘லைக்ஸ்’ போட்டிருக்கு!’’
- கா.பசும்பொன், மதுரை.