அசோகமித்திரனின் ‘நடைவெளிப் பயணம்’ தந்த அனுபவம் அருமை. அதற்கு ஸ்யாம் ஓவியங்கள் புதுமை! ‘பயணம் நிறைந்தது’ என்ற வரி, நெஞ்சில் ஏக்கத்தை வார்த்தது. அதுவே இத்தொடரின் வெற்றி!- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

என்னது? வேகா நடிப்பதை நிறுத்திவிட்டு ஆல்பம் தயாரிக்கிறாரா? நியூயார்க்கில் வேறு செட்டிலாகி விட்டாரா..? வேகாவுக்கு இந்த வேகம் கொஞ்சம் அதிகம்தான் சார். போகாதே வேகா!
- மு.மதிவாணன், அரூர்.
வீல் சேரில் வாழ்ந்தாலும் விரக்தி கொள்ளாமல் வாழ்வில் வென்றதே சாதனைதான். அதன் பின், தன்போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ நினைக்கும் பாலாஜிபாபு ரியலி கிரேட்!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.
சுவையான தகவல்களை டாப் 5, டாப் 10 எனப் பார்த்திருக்கிறோம். சுவை தரும் கையேந்தி பவன்களுக்கே ஒரு ‘டாப் 5’ கொடுத்து அசத்திவிட்டீர்கள். அது, சென்னைக்கு மட்டும் என்பதுதான் ஒரே குறை!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
செல்போனில் இனி, தொட்டதற்கெல்லாம் கட்டணமா? போகிற போக்கைப் பார்த்தால், நாம் இந்த ஆண்ட்ராய்டு அடிமைத்தனத்தை விட்டு, மீண்டும் ‘கடித முறைக்கு’ திரும்ப வேண்டி வரும் போல!
- சி.கலைவாணி, வேலூர்.
பெரிய படங்களோடு மோதவிருக்கும் விஷால், ‘நாமதான் எல்லாமே என யாரும் இங்கே நினைக்க முடியாது’ எனச் சொல்லியிருப்பது நிஜமாகவே ‘ஆம்பள’த்தனம்!
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.
‘மூணு வீல், நாலு வீல் சைக்கிள்’... படிப்பதற்கே புதுமையாகத்தான் இருந்தது. இனி, இளைஞர்கள் இப்படிப்பட்ட விநோத வாகனங்களில் வந்து பெண்களிடம் சீனைப் போடுவார்கள் போலவே!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
தமிழ்க் குறும்படங்கள் பற்றிய ‘பேசும் சித்திரங்கள்’ தொடர், புதுமையைத் தேடும் வாசகர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது உண்மை. வெறும் கதைகளாகச் சொல்லாமல், புதிதாக குறும்படம் எடுக்க விரும்புகிறவர்களுக்குப் பாடமாகவும் இருந்தது.
- ஆர்.மலர்விழி, சென்னை-17.
‘மழைத்தும்பிகள்’ பகுதியில் வரும் குறும்பாக்கள் அறிவுமதியின் கவித்துவத்தின் தனித் தன்மையைக் காட்டுகின்றன. ஒவ்வொரு வாரமும் ரசனை கூடுகிறது!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.
ஆல்தோட்ட பூபதியின் ‘குட்டிச்சுவர் அவார்ட்ஸ் 2014’ குட் செலக்ஷன்! வாரா வாரம் வாசகர்களைக் கதிகலங்கடித்த கலக்கல் எழுத்தாளர் விருதினை, ஆல்தோட்ட பூபதிக்கு நாங்கள் தருகிறோம்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.