வாழைப்பழ கொள்ளை!பணத்தை அடிக்க திருடர்கள் போடும் பிளான்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஷாக் என்றாலும் பலரையும் சிரிக்க வைத்துவிடும். பெங்களூருவில் நடந்த பனானா கொள்கை சம்பவம் அந்த ரகம். நானாபாரதி பகுதியிலுள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய வந்த ஏஜன்சி ஊழியர் இருவரும், ட்ரைவரோடு சேர்ந்து ரூ.90 லட்சத்தை அபேஸ் செய்ய திட்டமிட்டனர். இதற்காக மண்டையை குடைந்தெல்லாம் யோசிக்கவில்லை. சிம்பிள் ஐடியாதான்.

ஏடிஎம் செக்யூரிட்டி நடராஜிடம் தங்களுக்கு வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி அனுப்பினர். போதாதா? நடராஜ் வருவதற்குள் பணத்துடன் எஸ்கேப்பாகி விட்டனர். சுதாரித்த நடராஜ், வாங்கிவந்த பனானாவைக்கூட உரித்துச் சாப்பிடாமல் பேங்க் மேனேஜர் ரகுநாத்துக்கு போன் செய்து விவரத்தை சொல்லி விட்டார். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

- ரோனி