விடைபெற்ற பிறகு
திரும்பிப்
பார்க்க வைக்காத
அளவிற்குத்
திருப்தியான
உடல்நாள்
அது
பையா
நீ அனுப்பி வைத்துள்ள
ஆடைகள்
அழகாகத்தான்
இருக்கின்றன
ஆனாலும் கேட்கிறேன்
ஆடைகள் என்பவை
கட்டிப் பார்க்கையிலா
அழகு?
கடலின் வெகுநேரப்
பேரிரைச்சலுக்குப்
பின்தான்
கேட்க வாய்த்தது
சங்கின்
இசை
உண்மையைச் சொல்
இன்றைய வாசிப்பில்
முகம்
கணக்குப் புத்தகமா
கவிதைப் புத்தகமா
பூட்டிய கதவைத் திறக்காமல்
வந்து
படுப்பவரே
உண்மையானவர்
எல்லாவற்றையும் மறப்பவர்களே
அனுபவிக்கிறார்கள்
அவ்வளவு எளிதில்லை
அதற்காக
இல்லையென்று
ஏற்க வைத்து
அதற்காகத்
தொடுவது
அறிவுமதி