‘‘எதுக்காக அந்த வீட்டுல பூட்டை உடைச்சி திருடினே..?’’
‘‘சாவி செய்யிறதுக்கெல்லாம்
எங்க எசமான் நேரம்
இருக்கு.... ரொம்ப
டைட் ஷெட்யூல்!’’
- யுவகிருஷ்ணா,
தூத்துக்குடி.
தத்துவம் மச்சி தத்துவம்
வீட்ல இருக்கிற கேட்டுக்கு பூட்டு போடலாம், கோயில் கேட்டுக்கு பூட்டு போடலாம், கம்பெனி கேட்டுக்குக்கூட பூட்டு போடலாம். ஆனா, டெல்லியில இருக்கிற ‘இந்தியா கேட்’டுக்கு யாராவது பூட்டு போட முடியுமா?
- ஜி.தாரணி, மதுரை.
‘‘தன்னை பேட்டி எடுத்த நிருபரை தலைவர் முறைக்கிறாரே... ஏன்?’’
‘‘புழல், வேலூர், திகார்... இந்த மூணு ஜெயில்ல எந்த சாப்பாடு உங்க உடம்புக்கு ஒத்துப் போச்சுன்னு கேள்வி கேட்டாராம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘அந்த டாக்டர் கிட்ட ஆபரேஷன் பண்ணினா என்னோட வயிற்று வலி போயிடுமா..?’’
‘‘உயிரே போகும்போது வயித்து வலி போகாதா..!’’
- லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை-91.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் விஞ்ஞானம் முன்னேறினாலும், செவ்வாய்க்கு ராக்கெட்தான் விடமுடியும். ரயிலோ, பஸ்ஸோ இங்கிருந்து விடமுடியுமா?
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘தலைவரை எதுக்கு தூங்கும்போது கட்டிலோட சேர்த்து கட்டி வச்சிருக்கீங்க..?’’
‘‘அவருக்கு தூக்கத்துல வீட்டை விட்டு வெளிநடப்பு பண்ற வியாதி இருக்கு, அதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘தலைவர்
தான்
சினிமாவுல
இருந்து
வந்தவர்ங்கறதை
நிரூபிச்சிட்டார்!’’
‘‘எப்படி?’’
‘‘தன் மகனை தலைவரா போட்டு பெரிய பட்ஜெட்ல ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்க பூஜை போட்டுட்டு இருக்காராம்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.