ஜோக்ஸ்




‘‘தலைவர் ஏன் குற்றப் பத்திரிகையை வாங்க மறுக்கிறார்..?’’
‘‘குற்றப் பத்திரிகையோட டிசைன் சரியில்லையாம்..!’’
- லெட்சுமி மணிவண்ணன், சிக்கல்.

‘‘இப்ப எப்படி இருக்கு... பரவாயில்லையா?’’
‘‘இதுக்கு பழைய நர்ஸே பெட்டரா இருந்தது டாக்டர்!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘அந்த டைரக்டரை போர் குற்றவாளியா அறிவிக்கணும்னு ரசிகர்கள் கோரிக்கை வச்சிருக்காங்களாமே..?’’
‘‘ஆமாம், அவரோட படம் பயங்கரமா போர் அடிக்குதாம்..!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி

‘‘டாக்டரைக் கொல்றதுக்கு முயற்சி செஞ்சியாமே..?’’
‘‘அவர் மட்டும் என்னை ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாமா..?’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘செருப்புக் கடைக்குப் பக்கத்துல எதுக்குத் தலைவரே பொதுக்கூட்ட மேடை அமைக்கச் சொல்றீங்க?’’
‘‘இந்த முறையாவது என் மேல புதுச் செருப்பை வீசுவாங்கன்னுதான்யா!’’
- வி.வெங்கட்,
சீர்காழி.

என்னதான் சிகரெட்டை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பிடித்தாலும் அதை ‘சிகரெட்’னுதான் சொல்லுவோம்; ‘சீக்ரெட்’னு சொல்ல மாட்டோம்!
 என்.கஜேந்திரன், நிரவி.

என்னதான் புகழ்பெற்ற சமையல்காரரா இருந்தாலும் சரி... அவரால ‘இடி’யாப்பம்தான் செய்ய முடியும்; ‘மின்னல்’ ஆப்பம் செய்ய முடியாது!
- தத்துவம் சொல்லி சிக்கல் உண்டுபண்ணுவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.