facebook வலைப்பேச்சு




‘ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்’ என்று பலர் எழுதுகிறார்கள். யார் அந்த ஜான்? அவருக்குத்தான் ஏன் இவ்வளவு பசி?!
- ராஜேஸ்வரி ராஜி

கடைசி உருண்டையையும்
வாயில் போட்டுக்கொண்டு
கையைக்
கழுவியபோதுதான்...

ஏமாற்றத்தில் எழுந்த நாய்
ஜாடையாய் வீட்டுக்குள்
ஒரு நோட்டம் விட்டது.
 கண்மணி குணசேகரன்

நீண்ட வருடங்கள் கழித்து
எதார்த்தமாய்
பள்ளிக்காதலியை
பார்த்தது போல்
அவ்வளவு பரவசப்படுத்துகிறது
பெய்யும் மழை...
- கி.சார்லஸ்

திருமணம் நிச்சயமானதும் அவசர அவசரமாக சமையல் கற்றுக்கொள்ளும் பெண்ணும்,
கோடை விடுமுறைக்கு இடப்பெயர்ச்சியாகும் மனைவியிடம்
‘வாஷிங் மெஷினில் எந்த பட்டனை எப்போ அழுத்தணும்’னு கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆணும்...
# இந்த உலகத்துக்கு எதையோ சொல்ல வர்றாங்க!
- கௌதமன் டிஎஸ் கரிசல்குளத்தான்

கல்யாணத்துக்கு அப்புறமா படுக்கை அறையில் பல்வேறு வாசம் வீசுமாம்...
கல்யாணமான புதிதில்: பெர்ஃப்யூம், பூ, சாக்லெட், கிரேப்ஸ்.
3 வருடத்திற்குப் பின்: பேபி பவுடர், ஈரத்துணி, சாம்பிராணி புகை.
15 வருடத்திற்குப் பின்: தலைவலி தைலம், மாத்திர வாசனை, அயோடெக்ஸ்.
40 வருடத்திற்குப் பின்: அகர்பத்தி மட்டுமே...
- சரவ் யுவர்ஸ்

முடிந்தவரை ஒரு மனிதனுக்கேனும் ஆறுதல் கூறுங்கள்... அறிவுரைகள் புத்தகங்களிலேயே கிடைத்துவிடக் கூடும்.
- வாசு முருகவேல்

நாலு முக்கில் அமர்ந்து தம் அடித்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள்தான் உலகின் முதல் ‘ஜிபிஎஸ்’.
- ப்ரபின் ராஜ்

மார்க்ல ஃபர்ஸ்ட்டா வர்ற பொண்ணுங்கள முந்த மாட்டாய்ங்க... ரோட்ல ஃபாஸ்ட்டா போற பொண்ண மட்டும் முந்திரணுமாம்!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

நான் உதிர்ந்து கொண்டிருப்பதைப்
பூ போல
பார்த்துக் கொண்டிருந்தேன்
 - ராஜா சந்திரசேகர்
கடித்துத் துப்புகிறாய்
நகத்தினை...
வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது
என் ப்ரியம்!
- யாழி கிரிதரன்

‘‘உடனே நம்ம காரிய கமிட்டியை கூட்டி தேர்தல் முடிவு பற்றி
விவாதிக்கணும்...’’
‘‘தோல்விக்குக் காரணம் என்னன்னுதானே?’’
‘‘இல்ல... 43 இடத்துல எப்படி ஜெயிச்சோம்ங்கறத தெரிஞ்சுக்கணும்!’’
- கார்ட்டூனிஸ்ட் முருகு

இட்லி சாஃப்ட்டா இல்லன்னாலும் சாப்பிடற மாதிரியாவது இருக்கணும். இங்க இருந்து தூக்கி எறிஞ்சா எதிர்த்தால வர்றவன் மண்டையில இருந்து தக்காளி சட்னி வர்ற மாதிரி இருக்கக் கூடாது.
- ஃப்ராங்க்ளின் டெனி

இன்றைய நீதி - செய்தி: டீ வித்துக்கிட்டிருந்தவர் எல்லாம் நாயர் அல்ல.
- முகில்

twitter வலைப்பேச்சு

@iamVINISH 
  ‘நான் இன்னைக்குப் புறப்படுறேன்’னு நாம சொல்லும்போது யாரும் சந்தோஷப்படாத மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்தா போதும்!

@ammuthalib 
  ஆக, கேப்டன் யாருகூட கூட்டணி வைக்கிறாரோ அவங்க ஆட்சியப் புடிக்கலாம். வித்தியாசமான ஜாதகம் போலயே கேப்டனுக்கு.

@urs_priya 
  மகள்/மகன் இசையை ரசிக்கத் தொடங்கியதும்தான் லேட்டஸ்ட் பாடல்கள் எல்லாம் பெற்றோருக்கு அப்டேட் ஆகின்றன:)

@thirumarant   
குடிக்கு எதிராக என்றால், ஃபுல் வாங்கி வைத்து அதன் எதிரேதானே?

  @Rocket_Rajesh 
லாட்ஜ் பாத்ரூம் சுவர்ல ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டு பலதரப்பட்ட சிந்தனைய உண்டாக்குது...


@Gnanakuthu 
காங்கிரசின் தோல்வி ஆராய்ச்சிக்குரியது: ஞானதேசிகன்
# நின்னுக்கிட்டு பண்ணுங்க; உட்கார்ந்துக்கிட்டு பண்ணுங்க... 5 வருஷம் இருக்குல்ல, பதறாம நிதானமா!

@mpgiri 
ரொம்ப நாளைக்கு அப்புறம், கீழ விழுந்து கும்பிட்டுட்டு யார் உதவியும் இல்லாம திருப்பி எழுந்திருக்கிற அளவு பலமுள்ள பிரதமர் நமக்குக் கிடைச்சிருக்காரு!

@RavikumarMGR 
இந்தியாலயே பெரிய ஹீரோ சிரஞ்சீவிதான்!
# எல்லா கல்யாணப் பத்திரிகையிலும் மாப்பிள்ளை பேருக்கு முன்னாடி சிரஞ்சீவின்னுதானே போடுறாங்க!

@RazKoLu   
நம்மள படைச்ச சாமியே ஒரு ஓரமா வெட்டியாத்தான் உக்காந்துனு இருக்காரு, நாம எதுக்கு வேலைக்கு போகணும்ன்றேன்.
# இதச் சொன்னா...

@Kaniyen 
அலாரம் வைக்காமல் தூங்கிவிட்டதோ, இன்னும் எந்திரிக்கவில்லை சூரியன்!

@sudarkodii   
ஆசையைத் துறந்தவன் இமயமலைக்கும், ஆசையைத் திறந்தவன் டில்லிக்கும் போகிறான்!
@senthilcp 
பெரும்பாலான கிராமத்துப் பெண்களுக்கு ஈரத்துண்டுகள்தான் நைட்டிக்கான துப்பட்டா...

@bommaiya 
ஈ.பி. காரங்க தமிழ்நாட்ட அமெரிக்காவுக்கு இணையாக கொண்டு வந்துடுவாங்க போல...
# பவர் சப்ளை 110 வோல்ட்ஸ்தான் வருது!

@raajarajan_r 
ஆண்களுக்குக் கழிவறையும், பெண்களுக்கு சமையலறையும் சிந்தனை ஊற்றுச் சுழி!

@Elanthenral
விறகு அடுப்பில்
வீடு முழுக்க புகை மண்டுகிறது...

அனைவர் கோபமும்
அடுப்புக்கு மிகஅருகில் இருக்கும்
அம்மாவை நோக்கியே போகிறது!

@kunthavai13 
யாரிடம், எதை சொல்லக்கூடாது என்பது சொன்ன பிறகுதான் தெரிகிறது :(