‘ரயில்கள் பயணிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தண்டவாளங்கள் சும்மாதானே இருக்கின்றன... அவற்றைப் பயன் படுத்தினால் என்ன?’ என சில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்குத் தோன்றியதன் விளைவுதான் இந்தப் பயணம்!பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ‘ரயில் ஷேர் ஆட்டோ’ சர்வீஸ் ரொம்ப பாப்புலர். ஒரு டிராலிக்கு மேலே குடையைக் கட்டி வைத்து வாகனம் ஆக்கிவிட்டார்கள். அதிகபட்சம் எட்டு பேர் அமரலாம்.
அப்படியே இந்த டிராலியை தண்டவாளத்தில் தள்ளிக்கொண்டு போகிறார்கள். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பயணிகள் இறங்கி, ஏறுகிறார்கள். திடீரென ரயில் வந்தால், எல்லோரையும் இறங்கி ஓரமாய் நிற்கச் சொல்லி விட்டு, டிராலியைத் தூக்கிக்கொண்டு ஓரமாகப் போகிறார் டிராலிக்காரர். ரயில் போனதும் பயணம் தொடர்கிறது. இப்படி ஓட்டியே ஒரு நாளில் ஐந்நூறு ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். நூற்றுக்கணக்கான டிராலிகள் தினமும் போவதும் வருவதுமாக இருக்கின்றன. இந்த குறைந்த கட்டண சர்வீஸைத் தடுக்க முயன்று, மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கி விட்டது ரயில்வே.
- ரெமோ