குறை



கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒரு மூதாட்டி கோபமாக சத்தம் போட்டார்...''அதிரசம் அம்பத்து ஒண்ணு வைக்கணும்... ஆனா, இருபத்தொண்ணுதான் இருக்கு. கல்யாண சீரை இப்படிக் குறைவா செய்தா எப்படி? ஆடம்பரமா கல்யாணம் பண்ணிட்டா போதுமா? நகையும் பணமும் கொடுத்துட்டா போதுமா? செய்ய வேண்டியதைச் சரிவர செய்ய வேண்டாமா? உறவில நாலு பேர் கேட்டா, நாங்க என்ன பதில் சொல்றது?’’

பெண்ணின் பெற்றோர் கையைப் பிசைந்து நின்றார்கள். ‘எல்லாமே பார்த்துப் பார்த்துதானே செய்தோம்... கவனக் குறைவாக நடந்த இந்தச் சின்னத் தவறுக்குப் போய் இப்படி குதிக்
கிறார்களே. இப்போதே இப்படியென்றால் நம் பெண்ணை என்ன பாடு படுத்துவார்களோ’ என நினைத்தபோது பெண்ணின் அம்மாவுக்கு கண்ணீரே வந்தது. மாப்பிள்ளையிம் அம்மா மெதுவாக அவர்கள் அருகில் வந்தாள்...

‘‘சம்மந்தி... இதைப் பெரிசா கண்டுக்காதீங்க... தங்கம், பட்டு, விருந்துன்னு பணத்தை அள்ளிச் செலவு செய்திருக்கீங்க. உங்க மேலயும் மாப்பிள்ளை - பொண்ணு மேலயும் கண் திருஷ்டி எதுவும் பட்டுடக் கூடாதேன்னு நான்தான் இப்படிச் சொல்லச் சொன்னேன்!’’

பர்வதவர்த்தினி