அமெரிக்காவிலிருந்து மீண்டும் வந்து சேர்ந்த அஞ்சலி, இப்போது கைவசம் படங்கள் இல்லாமல் இருக்கிறார். ஏற்கனவே அவரோடு கூட நடித்த நடிகர்களுக்கு போன் செய்து வாய்ப்புக் கேட்கிறார். மறுபடியும் ஒரு ரவுண்டு வரும் ஆசையில், இன்னும் வெயிட்டை குறைக்க அரும்பாடுபடுகிறார். இரண்டு படங்களையாவது கையில் வைத்துக்கொண்டுதான் சென்னைக்குத் திரும்ப உத்தேசமாம்.
இங்கே சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போய்விட்ட நடிகை ஃபுளோரா இப்போது பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால் அங்கே அவர் கவர்ச்சிப் புயல் இல்லை. நாகேஷ் குக்குனூர் போன்ற நல்ல சினிமா இயக்குனர்கள் படங்களில் நடித்து, ‘சிறந்த வளர்ந்து வரும் நடிகை’ என விருது வாங்கி விட்டார்.
‘மான் கராத்தே’வுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயர் ‘ரஜினி முருகன்’. இதில் தமன்னாவை ஜோடியாகப் போட பேச்சுவார்த்தை நடக்கிறது. அனேகமாக அவருக்கும் சம்மதம்தான் என்கிறார்கள்.
‘உத்தமவில்லனு’க்கு முன்னமே ‘விஸ்வரூபம் 2’ ரெடியாகி விட்டது. பத்து நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி. ஆனாலும் முதலில் ‘உத்தம வில்லன்’தான் திரையைத் தொடப் போகிறது. பெங்களூரு, சென்னை என இரண்டு இடங்கள் மட்டும்தான் ஷூட்டிங் ஸ்பாட் என்பதால் இந்த விரைவு.
‘சிம்பு, சிவகார்த்தியுடன் இணைந்து ஒரு படம் செய்யலாமா’ என யோசித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதற்கு கொள்கை அளவில் சிவகார்த்தி ரெடி. சிம்புவும் தனுஷுக்கு நெருங்கிய நண்பர்தான். ஆனால் இதற்கு ஓகே சொல்வாரா என்பது தான் மில்லியன் கேள்வி.
‘கற்றது தமிழ்’ வெளியான நேரத்தில் ராமிடம் கதை கேட்டு இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்த சித்தார்த். இதுவரை தேதியும் கொடுக்கவில்லை; கொடுத்த பணத்தைத் திரும்பவும் கேட்கவில்லை.
மூன்று வருடங்களில் வெளியில் தலைகாட்டாமல் இருந்த ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா, அதிரடியான ஸ்கிரிப்ட்டோடு ரெடியாகிவிட்டார். அந்த ஸ்கிரிப்டுக்கு அத்தனை ஹீரோக்களும் அவரை விரட்ட, குமாரராஜா தேர்ந்து எடுத்திருக்கிற ஹீரோ பகத் பாசில். ஆமாம், அதே நஸ்ரியா ‘வுட்-பி’தான். அனேகமாக அவரே தயாரிக்கத் திட்டமிடுகிறார் என்கிறார்கள்.
‘ஐ’ பட இசை வெளியீட்டு விழா பெரும் கொண்டாட்டமாக நடக்கும் என்கிறார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் வெளியிட, அர்னால்டு, கமல் கலந்து கொள்கிறார்கள் எனத் தெரிகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு சினிமா விழாவில் கலந்துகொள்ள ஒரு முக்கியப் புள்ளியும் சம்மதம் சொல்லிவிட்டாராம். அவர் வேறு யாருமல்ல... தமிழக முதல்வர் ஜெயலலிதா!
சிம்பு-செல்வராகவன் சேர்ந்து செய்வதற்கான ஸ்கிரிப்ட் வேலை தொடங்கிவிட்டது. அடிக்கடி சிம்பு-செல்வா சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். ‘மைல்ட் அட்டாக்’கில் பாதிக்கப்பட்ட செல்வா, அதிலிருந்து மீண்டு, உற்சாகமாக ரெடியாகிவிட்டார். அடுத்து காதல் கதைதான்.
இப்பொழுதெல்லாம் படம் எடுக்கிறவர்களே தங்கள் படங்களை செமத்தியாக கிண்டல் அடிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் ‘வசந்த குமாரன்’ படத்திற்கு ‘தமிழ் சினிமாவின் ஆயிரத்துச் சில்லரையாவது காதல் கதை’ என கேப்ஷன் வைத்திருக்கிறார்கள்.
மகாபாரத சொற்பொழிவுக்காக தீவிரமாகத் தயாராகிறார் சிவகுமார். வழக்கமான கோயில் உரை மாதிரி இல்லாமல் இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி அதை ரெடி பண்ணுகிறார். பேரக்குழந்தைகளுக்கு விடுமுறை என்பதாலும், அவர்கள் வெளிநாடு போய்விட்டதாலும், மகாபாரதத் தயாரிப்பிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்.
இரவு பகலாக ‘வாலு’ ஷூட்டிங்கை நடத்த வைத்து, பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ஹன்சிகா. கடைசி நாளன்று சிம்பு உள்பட அனைவரும் கைகொடுத்து வணக்கம் தெரிவித்து விட்டுப் போனாராம். காதல் சேர்ந்ததை பார்த்த யூனிட், காதல் பிரிந்ததையும் பார்த்து சோகம் கொண்டதாம்.
தொடர்ந்து பாரதிராஜா படங்கள் தயாரிக்க உத்தேசித்திருக்கிறார்.
குறைந்தது நான்கு படங்கள் தயாரிக்க திட்டம். முதல் படத்தை அகத்தியன் டைரக்ட் செய்யப் போகிறார்.
ரொம்ப நாளாக விட்டிருந்த சினிமா ஆசை - அதாவது டைரக்ஷன் ஆசை - மறுபடியும் நாசருக்கு வந்து விட்டது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்கிரிப்ட்டை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். அடுத்த ‘அவதாரம்!’
அப்பா, அம்மாவுடன் கூட்டுக் குடும்பமாகவே சேர்ந்து வசிக்கிறார் அஜித். விடுமுறை தினங்களில் அமெரிக்காவில் இருக்கும் தம்பியும் குடும்பத்தோடு வந்து விடுகிறார். அப்புறம் என்ன... வீட்டில் மகளோடு சேர்ந்து இவரும் குழந்தையாகி
விளையாடுகிறார்.
விஷால் தங்கை மீது வைத்திருக்கும் ப்ரியம் எல்லையில்லாதது. எங்கே அவுட்டோர் ஷூட்டிங் போனாலும் தங்கைக்குத்தான் ஷாப்பிங் முதலிடம். ஒருநாளில் பத்து நிமிஷமாவது தங்கையிடம் பேசாமல் தூங்கமாட்டார். அப்பா, அம்மா கூட ஒரு வார்த்தை தங்கையை கடிந்து சொல்லி விட்டால் பொறுக்கமாட்டார். பாசமலர்!
ஒரு காலத்தில் பெரும் போட்டியாளர்கள் என வர்ணிக்கப்பட்ட நயன்தாராவும், த்ரிஷாவும் இப்போது எங்கே பார்த்தாலும் சேர்ந்து காணப்படுகிறார்கள். தனித் தனியாக வந்தாலும் ஒன்றாக உடனே சேர்ந்துவிடுகிறார்கள். பிறந்தநாள் விழாக்கள், பார்ட்டிகளுக்கு சொல்லி வைத்து போகிறார்கள். இவ்வளவு நட்புக்கு ஆச்சரியப்படுகிறார்கள் அவர்களது பொதுவான நண்பர்கள்.