ஜோக்ஸ்



‘‘குற்றப்பத்திரிகை ஏன்
கறையா இருக்கு..?’’
‘‘நீங்க செஞ்ச ஊழல் அதுல படிஞ்சிருக்கு தலைவரே..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘இது பணக்கார வீட்டு சாவுன்னு எப்படிச் சொல்றே?’’
‘‘ஒப்பாரி வச்சு அழறதுக்கு டி.வி. மெகா சீரியல் நடிகைகள் எல்லாம் வந்திருக்காங்களே..!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘ஃபுல்லா சரக்கு அடிச்சு ஃப்ளாட் ஆனதை தலைவர் சமாளிக்கிறாரா...
எப்படி?’’‘‘நான் கீழே விழுந்ததற்கு புவி ஈர்ப்பு விசைதான் காரணம் என்கிறாரே..!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.

‘‘மேடையில தூங்காதீங்கன்னு சொன்னா கேக்கறாரா
தலைவர்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘அதுக்குள்ள எவனோ மலர் வளையம் கொண்டு வந்து வச்சுட்டுப் போயிட்டான்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

கரகாட்டத்துல கரகத்தை தலையில் வச்சு ஆடுவாங்க. சீட்டாட்டத்துல சீட்டை கையில வச்சு ஆடுவாங்க. ஆடு புலி ஆட்டத்துல ஆட்டையும், புலியையும் எங்க வைச்சு ஆடுவாங்க?
- சீட்டாட்டத்தோடு தத்துவ ஆட்டத்தையும் கலந்து ஆடுவோர் சங்கம்
- எஸ்.சங்கர்,
திருப்பரங்குன்றம்.

என்னதான் ஒரு பொண்டாட்டி தன் கணவனை வீட்டுக்குள்ள வச்சு அடிச்சு பெண்டை கழட்டுனாலும், அவரை ‘ஹஸ்பெண்டு’னுதான் சொல்ல முடியும். ‘ஹவுஸ் பெண்டு’ன்னு சொல்ல முடியாது...
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘டாக்டர்... அந்த நர்ஸ் சிரிப்பால என்னைக் கொல்றாங்க!’’
‘‘நான் ஆபரேஷன் பண்றதுக்குள்ள அவங்களுக்கு என்ன அவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம்..?’’
- சரவணன், கொளக்குடி.