‘‘கோர்ட்ல எங்கேய்யா ஜட்ஜையும் காணோம்... வக்கீலையும் காணோம்... டவாலியையும் காணோம்...’’
‘‘ஐயோ தலைவரே... இது டென்னிஸ் கோர்ட்!’’
- சரவணன்,
கொளக்குடி.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் செருப்புக்கடை ஓனரா இருந்தாலும், அவரை அவர் குடும்பத்தின் ‘ஆணிவேர்’னுதான் சொல்லுவாங்களே தவிர, ‘புட்வேர்’னு சொல்ல மாட்டாங்க!
- இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.
என்னதான் கொண்டைக்கடலையில ‘கொண்டை’ இருந்தாலும், அந்தக் கொண்டையில் பூவெல்லாம் வைக்க முடியாது!
- சுண்டலை வைத்து தத்துவக் கிண்டல் செய்வோர் சங்கம்
- கா.பசும்பொன், மதுரை.
நம்ம தலைவர், நடிகரா இருந்து அரசியலுக்கு வந்தவர்தான்... அதுக்காக இப்படியா?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘ரெய்டுக்கு வந்த சி.பி.ஐ. டைரக்டர் கிட்டே, ‘யார்கிட்டே அசிஸ்டன்ட்டா இருந்தீங்க... உங்களை எந்த ஷூட்டிங்லயும் நான் பார்க்கலையேங்கறார்!’’
- கே.ஆனந்தன்,
பாப்பிரெட்டிபட்டி.
நம்ம தலைவரை சந்தேகப்பட்டது சரியாப் போச்சு...’’
‘‘எதை வச்சு சொல்றே?’’
‘‘மகளிரணித் தலைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்றார்..!’’
- அ.பேச்சியப்பன்,
ராஜபாளையம்.
‘‘நான் இன்னைக்குத்தான் புதுசா ஜெயிலுக்கு வந்திருக்கேன்...’’
‘‘அதுக்காக உங்களைப் பால் காய்ச்ச அனுமதிக்க முடியாது தலைவரே..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
‘‘டாக்டர் பட்டம் வாங்கின சந்தோஷத்துல தலைவர் உளறிட்டார்...’’
‘‘என்ன சொன்னார்..?’’
‘‘பணக்கார பேஷன்ட்டுகளிடம் கிட்னியைத் திருடி. ஏழைகளுக்குப் பொருத்துவேன்னு பேசிட்டார்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.