facebook வலைப்பேச்சு



முகம் அகம் என
அனைத்தும்
தொட்டுக் காய்ச்சும்
வெயில்
அவ்வளவு ஒன்றும்
உக்கிரமானதாக
இல்லையெனக்கு...
ஆணின் பார்வையைவிட.

ஸ்ரீதேவி மோகன்

உலக மேப்புக்கு கலர் அடிப்பதை விட மீசையைத் தாண்டி கருமை படாமல் டை அடிப்பது கஷ்டம்.
- செல்வ குமார்

இந்தியாவில் தனியார் தயாரிக்கும் சட்ட விரோதமில்லா ரூபாய் நாணயங்கள்... ஹால்ஸ் மிட்டாய்!
- வெங்கடேஷ் ஆறுமுகம்

காரணமே இல்லாமல் கோபம் வருவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
- சுந்தரி விஸ்வநாதன்

ஒரு ஹோட்டல் திறக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் ஒரு மருத்துவமனையும் திறக்கப்படுகிறது என்பது இன்னும் நமக்கு உறைக்கவில்லை.
மிகச் சிறந்த சுகாதார உணவு, அவரவர் வீட்டில் செய்யப்படுவதுதான்.
- ஆனந்தன் அமிர்தன்

முதலில் சக மனிதனைப் படியுங்கள்... அவனை விட சுவாரஸ்யமான புத்தகம் வேறு என்ன இருந்து விடப் போகிறது?!
- சிவராமன் ராமச்சந்திரன்

ஒரு கடலைப் போல இந்த இரவு. தூங்கவில்லை மனது.
- தர்மினி

பாக்குற ஆட்கள் எல்லாரும் நம்மளையே பாத்து சிரிச்சிட்டு போனா உலகமே சந்தோஷமா இருக்குன்னு அர்த்தமில்ல; நாம ஜிப்பு போடாம கூட இருக்கலாம்!
- டப்பா தலையன்

விலையுயர்ந்த பொம்மை
அழ வைக்கிறது
குழந்தையோடு அப்பாவையும்.
- கி.சார்லஸ்

ஆண்டவன் கொடுத்த
ஆயிரம் டன் ஏ.சி.தான்
ஆலமரம் எனப்படுகிறது...
- மோகனசுந்தரம் மீனாட்சிசுந்தரம்

யாராவது நல்லவர்கள் இருந்தால் எங்க ஊருக்கு வாங்க... கொஞ்சம் மழை பெய்யட்டும்!
- இந்துஜா வெங்கட்

உதிர்ந்துவிழும் இறகை
பொருட்படுத்தாது
பறக்கிறது பறவை,
விழுந்த இறகினை
பத்திரப்படுத்திவைக்கிறான்
பறவையை ரசிக்கும்
ஒருவன்.
-யாழி கிரிதரன்

தொலைத் தொடர்பு சாதனங்கள் நிறைந்த நேரத்தை மனிதனுக்குக் கொடுத்து விட்டு, மனிதர்களைப் பறித்து விட்டன.
- அன்பு சிவன்

நமக்குக் கீழே
உள்ளவர் கோடி!
இந்த வாசகம் எப்பொழுது புரிகிறதோ, இல்லையோ... மருத்துவமனைக்குச் சென்றால் மிகமிகத் தெளிவாக புரிந்துவிடுகிறது.
காயத்ரி ஞானம்

 twitter வலைப்பேச்சு

@senthilcp 
பஸ்ஸில் டூயட் பாடல்கள் ஒலிக்கையில், மனம் எழுந்து போய் வேறு லொகேஷனில் காதலியுடன் ஒரு டூயட்டை முடித்து விட்டு வந்தமர்கிறது...

@RazKoLu 
எந்த வித தீங்கும் விளைவிக்காத ‘மஞ்சா பை’யைக் கொண்டு வருபவனுக்கு பேர் எடக்கு நாட்டான், மண்ணின் எமனான பிளாஸ்டிக் கொண்டு வருபவன் நாகரிகவாதி.

@iamVINISH 
அஜித்துக்கு மட்டுமா... எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கும்தான் விளம்பரம் பிடிக்காது.
# சீரியசா சீரியல் பார்க்கும்போது போட்டா யாருக்குய்யா பிடிக்கும்?

@kiramaththan 
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே வெற்றி அறிவிப்பு வெளியிடும் காசியப்பன் பாத்திரக்கடைகள்!

@manis13mani 
இரவில் விழித்திருப்பவர்கள் தூக்கத்தை வெறுத்தவர்கள் அல்ல... துன்பத்தைக் கரை சேர்க்கத் தெரியாமல் துடிப்பவர்கள்!

@sweathasun 
உன் நினைவை எங்கும் இறக்கி வைக்க மனமில்லை... சுமந்துகொண்டே திரிகிறேன்!

@2nrc
எல்லா டெஸ்ட்டுக்கும் படிச்சுட்டுப் போகணும். ஐ டெஸ்ட்டுக்கு போயி படிச்சாப் போதும்!!!

@Pethusamy   
நீ
தலை கோதுகிறாய்...
நான்
அலை மோதுகிறேன்!

@arattaigirl 
திரைச்சீலை விலக்கினேன்.
உலக நாடகம்
ஆரம்பமானது
# ஜன்னல்

@FrancisPichaiah 
பதில் இருப்பதால்
குயில் பாடுவதில்லை
பாடல் இருப்பதால்
பாடுகிறது...!

@mangeshkarlata ஸ்நாம் அனைவரும் மலையுச்சியில்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் பின்னர்தான் தெரியும், மகிழ்ச்சியும் வளர்ச்சியும் ஏறும்வரைதான்!

@Kaniyen 

மோடி குழந்தையைப் போல் நடந்துகொள்கிறார்: பிரியங்கா
# இப்பதான் தெரியுமா? ரஜினியையும், விஜய்யையும் சந்தித்தபோதே நமக்குத் தெரியுமே!

@RenugaRain
அப்பா அம்மாவுக்குள் மனஸ்தாபம் என்று புரிந்துகொண்ட குழந்தைகள் குழந்தைத்தனம் தொலைக்கிறார்கள்.

@LawyerSunda 
அரசியல்வாதிகளின் விவாதங்களைப் பார்க்கும்போது டிவியை உடைத்து விடலாமா என்ற அளவிற்கு கோபம் வருவது எனக்கு மட்டும்தானா?
# டவுட்டு

@get2karthik r
  கடிகார முட்கள் நகர மறுக்கும் நேரத்தின் பெயர் ‘தனிமை’ எனப்படுவது!