சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்

மயக்கத்தில் ஆழ்ந்திருந்த யவன ராணியை அணைத்த படி காவிரிக்குள் நீந்தினான் இளமாறன். சுவாசத்தை அடக்கி பழக்கப்பட்டவன். எனவே தலையை உயர்த்தாமலேயே அவனால் மீனாக மாற முடிந்தது. ஆனால், உணர்வற்ற நிலையிலும் ராணி சுவாசத்தை அடக்கியது அவனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. வித்தைகளைக் கற்றவள். நிலத்தில் மட்டுமல்ல. நீரிலும். அதனாலேயே ஆபத்தானவள்.

சுற்றிலும் பார்த்தான். பாண்டிய இளவரசரோ, பெரியவரோ தென்படவில்லை. பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்திருப்பார்கள். கொற்கை துறை முகத்தில் வளர்ந்த இளவரசருக்கு நதியின் முகத்துவாரமோ, கடலோ புதிதல்ல. சொல்வதற்கில்லை. நீந்தியபடியே பாண்டிய நாட்டுக்கும் அவர் செல்லக் கூடும்.ஆனால் -யவன ராணியை அணைத்த படி தன்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. பொன்னியின் சுழலில் சிக்குவதற்குள் கரையேறியாக வேண்டும். நதிக்குள் எத்தனை காத தூரம் வந்திருக்கிறோம் என்பதை ஏற்கனவே அவன் கணக்கிட்டிருந்ததால், செல்ல வேண்டிய இலக்கு புரிந்தது. வலப்பக்கம் திரும்பினான். காவிரியின் போக்கை எதிர்ப்பது மலையை நகர்த்துவதற்குச் சமம். ஆனாலும் வேறு வழியில்லை.

கால் நாழிகைக்கும் குறைவான நேரத்தில் அவன் பாதங்கள் பாறை ஒன்றில் மோதின. ஒரு கையால் யவன ராணியை அணைத்தபடியே மறு கையால் அந்தப் பாறையை தடவினான். பாசிகள் வழுக்கின. அதைப் பொருட்படுத்தாமல் பாறை இடுக்குக்கு சென்றான். அங்கிருந்த யந்திரப் பொறியைத் திருகினான்.அடுத்த கணம், பாறை நகர ஆரம்பித்தது. தென்பட்ட பள்ளத்தில் நீரும் பாயத் தொடங்கியது. தாமதிக்காமல் ராணியை அதனுள் தள்ளியவன், பின்னாலேயே, தானும் நுழைந்தான். அத்துடன் கைகளை உயர்த்தி எதையோ பிடித்து திருகினான்.

எப்படித் திறந்ததோ அப்படியே அந்தப் பாறை மூடியது. நீர் வருவதும் நின்றது. தங்களுடன் பீப்பாயில் வந்த வயதானவரை நன்றியுடன் நினைத்துக் கொண்டான். தரையில் கோடுகளை கிழித்து அவர்தான் காவிரிக்குள் இருக்கும் இந்த சுரங்கப் பாதையை அடையாளம் காட்டினார். அதனால்தான் அவனால் துல்லியமாக அங்கு வர முடிந்தது. யவன ராணியை தூக்கி தன் தோள்மீது போட்டுக் கொண்டவன், சுரங்கப் பாதையில் நடக்க ஆரம்பித்தான்.

மறுகோடியில் அவனது வருகையை எதிர்நோக்கி சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை உருவிய வாளுடன் காத்திருந்தார்.‘‘இங்க எதுக்காக என்னை கூட்டிட்டு வந்திருக்கீங்க ரங்கராஜன்?’’- நீலாங்கரையில் இருந்த அந்த பங்களாவின் முன்னால் நின்றபடி தேன்மொழி கேட்டாள். சூரியன் அப்போது உதிக்கத் தொடங்கியிருந்தான்.

‘‘ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு போயிடலாம்...’’
‘‘என்ன வேலை?’’
‘‘ஒருத்தரை சந்திக்கணும்...’’
‘‘யாரை?’’

‘‘திருப்பதி தேவஸ்தான உறுப்பினரா நேத்து வரை இருந்த ராகவேந்திர ராவை...’’
‘‘விளையாடறீங்களா?’’ கோபத்தை கட்டுப்படுத்தியவள் அடிக்குரலில் அழுத்தமாக பேச ஆரம்பித்தாள். ‘‘ஸ்காட் வில்லியம்ஸ் எதுக்காக தமிழகம் வந்திருக்கான்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரிஞ்சு போச்சு. இனி அதை எப்படி தடுத்து நிறுத்தணும்னுதான் யோசிக்கணும். அதுக்கான வழிகள்லதான் கவனம் செலுத்தணும். அதை விட்டுட்டு சம்பந்தமே இல்லாத ஆட்களை பார்க்க நான் தயாரா இல்லை. நான் கிளம்பறேன்...’’

‘‘எங்க?’’
‘‘வக்கீலை பார்க்க...’’
‘‘எதுக்கு?’’
‘‘மெடிகோ நிறுவனத்துக்கு எதிரா வழக்குத் தொடர. அதுதான் தகுந்த ஆதாரங்கள் கிடைச்சிருச்சே...’’
‘‘அதை வச்சுக்கிட்டு எதுவும் செய்ய முடியாது...’’
‘‘வாட் டூ யூ மீன்?’’

‘‘ஐ மீன் வாட் ஐ ஸே. இங்க பாருங்க தேன்மொழி, இந்நேரம் ஸ்காட் வில்லியம்ஸுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். எந்த திசைல நாம போகப் போறோம்னு கூட கணக்குப் போட்டிருப்பான். அதுக்கு தகுந்தா மாதிரி காய்களை நகர்த்தி
யிருப்பான்...’’

‘‘அவனைப் பத்தி மிகையா மதிப்பிடறீங்க?’’
‘‘இல்லை. சரியா ஊகிக்கறேன். கடல் கடந்து ரெட் மார்க்கெட் பிசினஸ் பண்ண வந்தவன், சட்டத்தை பத்தி யோசிக்காமலா இருந்திருப்பான்? மிகச் சரியா ஓட்டையை அடைச்சிருப்பான். தவிர, இப்ப கேஸ் போட்டா அது முடிய பல வருடங்கள் ஆகும்...’’
‘‘அதுக்காக?’’

‘‘அவன் கொஞ்சமும் நினைக்காத இடத்துல அவனை தட்டணும்...’’
‘‘அதுக்காகத்தான் இங்க
வந்திருக்கோமா?’’
‘‘ஆமா. இங்க தட்டினாதான் அங்க அவனுக்கு வலிக்கும்...’’

‘‘கோயில் தேவஸ்தான உறுப்பினருக்கும் ஸ்காட் வில்லியம்ஸுக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘உள்ள வந்தா நீங்களே தெரிஞ்சுப்பீங்க...’’
‘‘ஓகே. இவரைப் பார்த்துட்டு பிரஸ்ஸுக்கு போகலாம்...’’
‘‘அந்த வேலையை பெரியவர் பார்த்துப்பார்...’’
‘‘அதுக்காகத்தான் நம்மை விட்டு பிரிஞ்சாரா?’’ 
‘‘ம்...’’

‘‘உண்மைல நீங்க எல்லாம் யாரு?’’
இதற்கு பதில் சொல்ல ரங்கராஜன் வாய் திறந்தபோது செக்யூரிட்டி எட்டிப் பார்த்தான். புன்னகையுடன் கேட்டைத் திறந்தான். ‘‘நீங்க வந்தா உள்ள விடச்சொல்லி நேத்து நைட்டே ஐயா சொல்லிட்டாரு...’’

சிமென்ட் பாதையில் நடந்தார்கள். இரு பக்கமும் பசுமையான புல்வெளி. அநேகமாக ரங்கராஜனுக்கு பழக்கப்பட்ட இடமாக இருக்க வேண்டும். போர்டிகோவில் நின்றிருந்த இன்னோவாவை கடந்து உள்ளே நுழைந்தான். தயக்கத்துடன் தேன்மொழி அவனைப் பின்தொடர்ந்தாள். ஹால் காலியாக இருந்தது.
‘‘ரூம்ல இருப்பார்னு நினைக்கறேன்...’’ - முணுமுணுத்தவன் வலப்பக்கம் இருந்த கதவைத் திறந்தான். அலுவலக அறை என்பதற்கு அடையாளமாக மேஜை, நாற்காலிகள் இருந்தன. ஆனால், ராகவேந்திர ராவ் மட்டும் அங்கில்லை.

‘‘மேல போய் பார்க்கலாம்...’’
ஹாலில் இருந்த இரும்புப் படிக்கட்டு வழியாக மாடிக்கு சென்றார்கள். இடப்பக்கம் திரும்பியவன் அங்கிருந்த மூன்றாவது அறைக்கு முன்னால் நின்றான். தன் ஆள்காட்டி விரலை மடித்து தட்டினான்.
‘‘சார்... சார்...’’

பதிலில்லை. புருவங்கள் முடிச்சிட தேன்மொழியை திரும்பிப் பார்த்தான். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. உதட்டைக் கடித்தவன் கதவின் பிடியைத் திருகினான். திறந்து கொண்டது.
உள்ளே சென்றார்கள். அதிர்ந்து நின்றார்கள். கட்டிலில் மல்லாந்து படுத்தபடி பிணமாகக் கிடந்தார் ராகவேந்திர ராவ். ‘‘வரவேண்டும்... வரவேண்டும்... எதற்காக மாளிகைக்கு வெளியே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்...’’ உடலெங்கும் மரியாதை பரவ சார்வாகனரை வணங்கினான் சகாதேவன்.

‘‘அழைப்புக்கு நன்றி. ஆனால், அதிகார வெறி பிடித்தவர்களின் இருப்பிடங்களுக்குள் சார்வாகனர்கள் நுழைவதில்லை. குருதியால் உருவான கட்டிடங்களில் எங்கள் கால் தடம் ஒருபோதும் பதியாது. அழைத்தது தர்மனை. கூப்பிடு அவனை...’’
‘‘அண்ணன் அக்னியை வணங்கிக் கொண்டிருக்கிறார்...’’
‘‘உடன் கிருஷ்ணன் இருக்கிறானா?’’
‘‘ஆம். அவர்தான் வேள்வியை முன்னின்று நடத்தி வைக்கிறார்...’’

‘‘நினைத்தேன். அந்தணர்களுடன் கைகோர்த்தபடி தனது நாடகத்தை அந்த இடையன் பிரமாதமாக அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டான். கிருஷ்ணனுக்கு தேவை பகவான் என்ற பட்டம். அதற்காக எந்த எல்லைக்கும் அவன் செல்வான். உன் அண்ணன் ஒரு கோழை. சுயநலவாதி. தர்மத்துக்குக் கட்டுப்பட்டு தான் வாழ்வதாக உலகம் போற்றிப் புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பவன். அது குறித்த கனவிலேயே சதாசர்வ காலமும் சஞ்சரிப்பவன்.

இதற்காக பெற்ற தாய், கட்டிய மனைவி முதற்கொண்டு உடன் பிறந்தவர்கள் வரை சகலரையும் பலி கொடுக்கத் தயாராக இருப்பவன். இவனது ஆசையை நிறைவேற்ற அந்த இடையன் துணை புரிகிறான். அதன் மூலம், தான் அடைய நினைக்கும் அவதார பதவியில் அமரத் துடிக்கிறான். மொத்தத்தில் இந்த இரு கபடதாரிகளின் நோக்கமும் ஒன்றுதான். அது மக்களை அழிப்பது. உழைப்பைச் சுரண்டுவது. இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிப்பது...’’

‘‘சார்வாகனரே... நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...’’ ‘‘முட்டாள். பாசம் என்னும் சங்கிலியால் கட்டப்பட்ட விலங்கு நீ. விசுவாசம் என்னும் போதை உன்னைச் சூழ்ந்திருக்கிறது. உனக்கு வால் ஆட்ட மட்டும்தான் தெரியும். குரைக்கத் தெரியாது. தனது லட்சியத்துக்கு ஏற்ப தர்மன் உன்னை வடிவமைத்திருக்கிறான். எனவே நாக்கைத் தொங்க போட்டபடி இப்படித்தான் அலைவாய். சுயபுத்தியோ, ஆராயும் தன்மையோ உன்னிடம் கிடையாது.

வந்த காரணத்தை சொல்லி விடுகிறேன். சகுனியுடன் தாயம் ஆட தர்மனை அனுமதிக்காதே. உண்மையில் இது கிருஷ்ணனின் பகடையாட்டம். உருட்டுவது அவன். உருளப்போவது லட்சக்கணக்கான தலைகள். குருக்ஷேத்திரம் என்பது இடமோ, பெயரோ, சொல்லோ அல்ல. அது இன அழிப்பின் தொடக்கம்...’’
‘‘சார்வாகனரே...’’

‘‘குரலை உயர்த்தாதே சகாதேவா. அனைத்து அழிவுகளின் ஆரம்பமாகவும் இருப்பது வேள்விகள்தான். ஒவ்வொரு ஹோமத்துக்கு பின்னாலும் ரத்த சேற்றில் வேர் விட்டு வளரும் அதிகாரத்தின் ருசி மறைந்திருக்கிறது. அதனால்தான் அந்தணர்கள் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதற்காகவே, ‘அக்னி தொட்ட பின் எதுவும் அழுக்கும் அல்ல, இழுக்கும் அல்ல’ என்கிறார்கள். தீ உண்ணும் அனைத்தும் தூய்மைதான் என்றெல்லாம் வியாக்கியானம் பேசுகிறார்கள். உண்மையில் ‘தீ’ என்னும் சொல்லே ‘தீங்கை’ உணர்த்தும் குறியீடுதான். தர்மனை எச்சரித்து வை. நான் வருகிறேன்...’’

கற்சிலையாக நின்றபடி சார்வாகனர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் செவியில் யாரோ உரத்துச் சிரிப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தான். தலையை விரித்தபடி திரௌபதி அங்கு நின்றிருந்தாள். அவளது பற்கள் ஒவ்வொன்றும் சகுனியின் கையில் இருக்கும் தாயம் போலவே சகாதேவனுக்குத் தெரிந்தது. சகுனியின் தாயத்துடன் அந்தக் குகைக்கு வந்தான் ஹாரி பார்ட்டர்.

இருட்டாக இருந்தது. ஆனாலும் பறந்த மின்மினிப் பூச்சிகள் வழியைக் காட்டின. கூர்மையான பாறைகளில் மோதாமல் விரிந்த பாதையில் நிதானமாக நடந்தான். தரை கரடுமுரடாக இருந்தபோதும் நிலம் குளிர்ச்சியாக இருந்தது. அது உச்சந்தலை வரை ஏறியது. பேசாமல் சாக்ஸ் அணிந்து வந்திருக்கலாம். கைகளை பரபரவென தேய்த்தவன், தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டான். தாயம் பத்திரமாக இருந்தது. திருப்தியுடன் நடந்தவன் பாதை வளையும் இடத்தில் சட்டென்று நின்றான்.

பேச்சுக்குரல் கேட்டது. ஓரமாக மெல்ல பதுங்கியவன் தன் தலையை மட்டும் நீட்டினான். பரந்த மைதானம். ‘‘எஜமானே... இப்ப உங்களுக்கு அஷ்டமா சித்திகளை கத்துக் கொடுக்கப் போறேன்...’’ என்று வேதாளம் சொல்லிக் கொண்டிருந்தது. ‘‘அப்படீன்னா?’’ மகேஷ் கேட்டான்.

‘‘உடம்பை பலமாக்கற வித்தை எஜமான். விக்கிரமாதித்த மகாராஜா இதுல எக்ஸ்பர்ட்...’’ ‘‘அப்படியா?’’‘‘ஆமா. அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்னு மொத்தம் எட்டு வித்தைங்க...’’
‘‘பேரெல்லாம் வாயிலயே நுழையலையே...’’

‘‘அதையெல்லாம் கண்டுக்காதீங்க எஜமான். அர்த்தத்தை புரிஞ்சுக்குங்க. ஈசியாகிடும்...’’
‘‘எப்படி?’’
‘‘பெரிய உடம்பை கால் சுண்டு விரல் மாதிரி சின்னதா மாத்தறது அனிமா...’’
‘‘ம்...’’

‘‘சின்ன உடம்பை இமயமலை மாதிரி பெரிசாக்கறது மகிமா...’’
‘‘அட...’’
‘‘சின்ன கல்லு மாதிரி இருக்கிற ஆளை மலை மாதிரி வெயிட்டா மாத்தறது கரிமா...’’
‘‘வாவ்...’’

‘‘காத்தோட காத்தா எடையே இல்லாம பேப்பர் மாதிரி உடம்பை மாத்தறது லகிமா...’’
‘‘அப்படிப் போடு...’’

‘‘எல்லாப் பொருளையும் ஆட்சி செய்யறது பிராப்தி...’’
‘‘கிரேட்...’’
‘‘எல்லாரையும் வசியம் பண்ணறது வசித்துவம்...’’
‘‘பலே...’’

‘‘கூடு விட்டு கூடு பாயறது ஈசித்துவம்...’’
‘‘மை காட். இத்தனை வித்தைகளையும் எனக்கு சொல்லிக் கொடுக்கப் போறியா வேதாளம்?’’
‘‘ஆமா எஜமான். அது என் கடமை...’’

‘‘தேங்க்யூ... தேங்க்யூ வெரி மச்... இதெல்லாம் ஹாரி பார்ட்டருக்கு தெரியுமா?’’
‘‘வாய்ப்பே இல்லை. அவனுக்கு மட்டுமில்ல... மந்திரவாதி தாத்தாவுக்கும் சூனியக்காரப் பாட்டிக்கும் கூட இந்த மாயாஜாலம் தெரியாது. ஏன்னா, அவங்க எல்லாம் கெட்டவங்க. இந்த வித்தைகள் எல்லாம் நல்ல பசங்களால மட்டும்தான்
கத்துக்க முடியும்...’’

‘‘நான் ரொம்ப குட் பாய் வேதாளம். மதர் பிராமிஸ்...’’
‘‘தெரியும் எஜமான். அதனாலதான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போறேன். முதல்ல அனிமா...’’
அதன் பிறகு ஹாரி பார்ட்டர் அங்கு நிற்கவில்லை. மடமடவென்று பாறை மீது ஏறினான். உச்சியில் கூரை போல் சிலந்தி வலை படர்ந்திருந்தது. அதை தட்டினான்.
‘‘யாரு?’’ குரல் மட்டும் ஒலித்தது.

‘‘நான்தான் ஹாரி பார்ட்டர்...’’
அடுத்த நொடி ஒரு சிறுவனின் தலை எட்டிப் பார்த்தது. ‘‘என்ன விஷயம்?’’
‘‘மகேஷ் அஷ்டமா சித்திகளை கத்துக்க ஆரம்பிச்சிட்டான்...’’
‘‘வாட்?’’ கேட்ட சிறுவன், தன் முழு உருவத்தையும் வெளிப்படுத்தினான். அதைப் பார்த்து ஹாரி பார்ட்டர் உற்சாகமானான்.
காரணம், சிலந்தியில் மறைந்திருந்த அந்த சிறுவன்தான் ஸ்பைடர் மேன்.

தலைவர் ரொம்ப குழம்பிப் போயிருக்கார்னு எப்படிச் சொல்றே?’’
‘‘கட்சித் தாவலுக்கும் தேர்தல் கமிஷனோட அனுமதி வாங்கணுமான்னு கேட்கறாரே..!

தலைவர் ரொம்ப வெகுளியா இருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘மகளிரணித் தலைவிக்கு மல்லிகைப்பூ வாங்கிக்
கொடுத்ததைக்கூட, தேர்தல்
செலவுக் கணக்குல கொண்டு வந்திருக்காரே!

புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்
காங்களே... யாருய்யா
அவங்கல்லாம்?’’
‘‘உங்க ஊழலை பார்த்து ஆர்வமா அரசியலுக்கு சம்பாதிக்க வந்தவங்களாம் தலைவரே..!
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

(தொடரும்)