‘‘டாக்டர் பட்டம் கிடைச்சதும் தலைவர் என்ன சொல்றார்..?’’
‘‘தெருவுக்கு நாலு டாக்டருங்க இருக்காங்களே... இதிலே நமக்கு எப்படிய்யா பேஷன்ட்டுங்க வருவாங்கன்னு கவலையா கேக்கறார்...’’
- மு.மதிவாணன், அரூர்.
‘‘ஒரு ஊர்ல ஜல்சாஸ்ரீன்னு ஒருத்தி இருந்தாளாம்...’’
‘‘ஐயோ தலைவரே... நாங்க கேட்டது வேற குட்டிக்கதை..!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.
ஸ்பீக்கரு...
‘‘எங்கள் தலைவர் கட்டை விரலை உயர்த்திக் காட்டியதற்காக ‘அவர் ஒரு கைநாட்டு’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
செய்வதை வன்மையாகக்
கண்டிக்கிறோம்...’’
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
‘‘தலைவரை எதுக்கு சந்தேகக் கேஸ்ல
பிடிச்சாங்க..?’’
‘‘தேர்தல் முடிஞ்ச
பிறகும் தொகுதியில சுத்தித் திரிஞ்சிருக்கார்...’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘தேர்தல் பிரசாரம் முடிஞ்சதும் ஜனங்களைப் பார்த்து தலைவர் என்ன பேசினார்..?’’
‘‘அடுத்ததா அஞ்சு வருஷம் கழிச்சு சந்திக்கலாம்னு சொன்னார்!’’
- ஜெ.தனலட்சுமி, கோவை.
‘‘தலைவர் மிகுந்த மன உளைச்சல்ல இருக்காரா... ஏன்?’’
‘‘ராத்திரி தூங்கறப்ப அவருக்கு வந்தது ‘பிரதமர் கனவா...’, `‘முத
லமைச்சர் கனவா...’ன்னு மறந்து போச்சாம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
தத்துவம் மச்சி தத்துவம்
எல்லா வங்கியிலேயும் ஏடிஎம் கார்டு குடுப்பாங்க. ஆனா ஓட்டு வங்கியில ஏடிஎம் கார்டு குடுப்பாங்களா?
- பேன்ட் பாக்கெட்டில் பேலன்ஸ் இல்லாத ஏ.டி.எம் கார்டு வைத்திருப்போர் சங்கம்
- டி.செல்வன்,
நெல்லையப்பபுரம்.