தத்துவம் மச்சி தத்துவம்



‘‘கூட்டம் வராததுக்கு என்ன காரணம்..?’’
‘‘பிரியாணியில லெக்பீஸ்
இல்லாததுதான் தலைவரே..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘பொதுக்கூட்டத்துக்கு யாரும் குடிச்சிட்டு வரக்
கூடாதுன்னு சொன்னோம்...’’
‘‘அப்புறம் என்னாச்சு?’’
‘‘தலைவரே வரலை...’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

என்னதான் தேர்தல் பிரசாரம் ‘அனல்’ பறந்தாலும், அது
எத்தனை ‘டிகிரி’ அனல்னு யாராலும் சொல்ல முடியாது!
- வெயிலுக்கு பயந்து பிரசாரத்தைப் புறக்கணித்தோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

என்னதான் தனித்துப் போட்டின்னு அறிவிச்சாலும், வேட்பு மனு தாக்கல் பண்ணும்போது பத்து பேரு கூட போயாகணும்!
- எல்லா கட்சிகளிடமும் நோட்டு வாங்கி நோட்டாவுக்கு வாக்களிப்போர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘தேர்தல் செலவு கணக்கு கேட்டா, மருந்துச் சீட்டுக்கட்டா தர்றியே... என்னய்யா இது?’’

‘‘தேர்தல்
ஜுரத்துக்கு மருந்து, மாத்திரை வாங்கிய செலவுக் கணக்கு தலைவரே..!’’

‘‘பொதுக்கூட்டத்துக்கு யாரும் குடிச்சிட்டு வரக்
கூடாதுன்னு சொன்னோம்...’’
‘‘அப்புறம் என்னாச்சு?’’
‘‘தலைவரே வரலை...’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘கூட்டணி விஷயத்துல தலைவர் ரொம்பத்தான்
பாதிக்கப்பட்டிருக்கார்னு எப்படிச்
சொல்றீங்க..?’’
‘‘அஜித் - கௌதம் மேனன்; விஜய் - ஏ.ஆர்.முருதாஸ் வெற்றிக் கூட்டணின்னு எழுதறாங்களே... இவங்க எந்தத் தொகுதியில நின்னாங்கன்னு கேட்கறாரு..!’’
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

‘‘மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையன்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘ஐ.பி.எஸ் முடிச்சிருந்தாலும், ‘ஓ.பி.எஸ்’ மாதிரி பணிவா இருப்பார்..!’’
- கா.பசும்பொன், மதுரை.