தத்துவம் மச்சி தத்துவம்
‘‘இந்த கண் டாக்டர், ஆபரேஷன் முடிஞ்சதும் வித்தியாசமா டெஸ்ட் பண்ணுவாரா... எப்படி?’’ ‘‘கிளினிக் எதிர் வீட்ல இருக்கற பொண்ணு சரியா தெரியுதான்னு பேஷன்ட் கிட்டே கேப்பாரு!’’ , பர்வீன் யூனுஸ்,சென்னை,44.
மசால் தோசையில மசால் இருக்கும்; நெய் தோசையில நெய் இருக்கும்; ஃபேமிலி தோசையில யாரோட ஃபேமிலியாவது இருக்குமா? , சாதா தோசையை திருப்பிப் போட்டு ஸ்பெஷலாக யோசிப்போர் சங்கம் , ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
‘‘தலைவரு விவரமே இல்லாம இருக்காரா...’’ ‘‘ஆமாம்! பேப்பர் போடற பையன்கிட்டே போய் ‘குற்றப் பத்திரிகை இருக்கா’ன்னு கேட்டுக்கிட்டிருக்காரே!’’ , டி.சேகர், திருத்துறைப்பூண்டி.
‘‘டாக்டர் தலைவரோட இடுப்புல தெர்மாமீட்டரை வச்சுப் பார்க்கறாரே... ஏன்?’’ ‘‘இடைத்’தேர்தல் ஜுரமா இருக்குமோன்னு சந்தேகப்படுறாராம்..!’’ , வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘தலைவரு விவரமே இல்லாம இருக்காரா...’’ ‘‘ஆமாம்! பேப்பர் போடற பையன்கிட்டே போய் ‘குற்றப் பத்திரிகை இருக்கா’ன்னு கேட்டுக்கிட்டிருக்காரே!’’ , டி.சேகர், திருத்துறைப்பூண்டி.
என்னதான் சேவலுக்கு கொண்டை இருந்தாலும், அதால பின்னல் போட்டு பூவெல்லாம் சூடிக்க முடியாது! , ரெட்டைப் பின்னல் பெண்களிடம் மனதை பறிகொடுப்போர் சங்கம் , பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘இயற்கைக் காட்சிகளெல்லாம் நல்லா வரையறீங்களே... எங்கே கத்துக்கிட்டீங்க?’’ ‘‘மினி பஸ்ல வரைஞ்ச அனுபவம்தான்..!’’ , அனார்கலி, தஞ்சாவூர்.
‘‘என் படம் மூலமா நீங்க தெரிஞ்சுக்கிட்ட மெஸேஜ் என்ன?’’ ‘‘அவசரப்பட்டு எந்தப் படத்துக்கும் போயிடக் கூடாதுங்கிற மெஸேஜ்தான்!’’ , வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
|