ஸ்பீக்கரு...
‘‘என்ன இருந்தாலும் நம்ம கூட்டத்துக்கு காலேஜ் பசங்களைக் கூப்பிட்டிருக்கக் கூடாது தலைவரே...’’ ‘‘ஏன்... என்னாச்சு?’’ ‘‘மீட்டிங்கை ‘கட்’ அடிச்சுட்டு சினிமாவுக்குப் போயிட்டாங்களே..!’’ , பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘என்னங்க... நேத்து ராத்திரி உங்க கனவுல நான் வந்தேனா..?’’ ‘‘ஆமா! எப்படிக் கண்டு பிடிச்சே..?’’ ‘‘தூக்கத்துல, ‘காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’ன்னு உளறினீங்களே?’’ , சரவணன், கொளக்குடி.
‘‘மப்பில் மேடையில் உளறுகிறார் என தலைவர் மீது எதிர்க்கட்சியினர் சொல்லும் குற்றச்சாட்டை மறுக்கும் அதே வேளையில்... மப்பில் இல்லாவிட்டாலும் அவர் உளறிக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்...’’ , பர்வீன் யூனுஸ்,சென்னை,44.
‘தலையணை’யை தலைக்கு வச்சு தூங்கலாம். ஆனா, ‘கல்லணை’யை தலைக்கு வச்சு தூங்க முடியுமா? , வெட்டியாக தூங்கி கனவில் தத்துவம் தேடுவோர் சங்கம் , ஹெச்.சுல்தானா, கீழக்கரை.
‘‘காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்னு தலைவர்கிட்ட கேட்டிருக்கக் கூடாது...’’ ‘‘ஏன்..?’’ ‘‘காதல்ங்கறது ‘போலீஸ்’ மாதிரி... எப்படியாவது சமாளிச்சிடலாம்; கல்யாணம்ங்கறது ‘சி.பி.ஐ மாதிரி... சிக்குனா அவ்வளவுதான்னு விளக்கம் சொல்றார்..!’’ , உ.குணசீல பாண்டியன், ராஜபாளையம்.
‘‘ஏன் ஜோசியரே... உம்முடைய கிளி கூண்டை விட்டு வெளியே வரமாட்டேங்குது?’’ ‘‘அது உள்ளிருப்புப் போராட்டம் நடத்துதாம்...’’ , சேகர், திருத் துறைப்பூண்டி.
‘‘ஆபரேஷன் தியேட்டர் உள்ளே என்ன கோடு போட்டு வச்சிருக்காங்க..?’’ ‘‘அதுதான் அபாயக் கட்டமாம்...’’ , வி.சாரதி டேச்சு, சென்னை,5.
|