பட்டாம்பூச்சி காகிதம்

கவிதைக்காரர்கள் வீதி

உன் பெயர் கிறுக்கிய
மக்கிப் போன
ஒரு காகிதத்திலிருந்து
பட்டாம் பூச்சி ஒன்று
சிறகு விரித்துப் பறக்கிறது.
அகவி இறகு உதிர்த்துப்
போகிறது ஒரு மயில்.
துள்ளி நீந்திப் போகிறது
ஒரு கெண்டை மீன்.
மெல்லிதழ் மலர்த்துகிறது
ஒரு நீல நிற வாசப் பூ.
மருண்டு தலை தூக்குகிறது
மிரள் விழி மானொன்று.
குக்கூ குக்கூ எனப் பாடுகிறது
ஒரு மாந்தோப்புக் குயில்.
முத்தமிட்டு முயங்கச் செய்கிறது
ஒரு நிசி நேரத்து மழை.
ஒரு மதியத்தில் சட்டென்று
வீசிப் போகிறது குளிர் காற்று.
மதில் நின்று நோட்டம்
விடுகிறது ஒரு கறுப்புப் பூனை.
மேகம் தழுவி உலவிக் களிக்கிறது
ஒரு கார்காலத்து முழு நிலா.
மஞ்சள் வெயில் குடை பிடிக்கிறது
ஒரு வியாழக்கிழமை சூரியன்.
வண்ணம் கொட்டி கை தட்டுகிறது
ஒரு அந்திப் பொழுதின் வானம்.
நட்சத்திரங்களைச் சிதற விடுகிறது
வன்பனி வாட்டிய ஒரு மார்கழி இரவு.
வானவில்லை நிமிர்த்திப் பார்க்கும்
ஒரு கோணல் மனசின்
நினைவுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது ஒரு நேசமுகம்.
துடி இதயம் ஒரு இடைக்கணத்தில்
அடங்கித் துடிக்க
உன் விரல் கோத்த
என் கை விரல்கள்
நடுங்கி நழுவவிட்டது
உன் பெயர் கிறுக்கிய
அந்த மக்கிப் போன காகிதத்தை...

பி.ஜி.சரவணன்