கர்நாடக சங்கீத உலகில் நல்ல எதிர்காலம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineமயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபையில் ரஞ்சனி - காயத்ரியின் கச்சேரி. பாட்டு பாடுபவர்களுக்கு இன்னொரு வாத்தியம் வாசிக்கத் தெரிந்து, அதை அனுபவிக்க முடியும் என்றால், அது பெரிய உதவியாகத்தான் இருக்கும். அதேபோல, வாத்தியம் வாசிக்கும் கலைஞர்களுக்கும் சங்கீதம் பாடத் தெரிந்தால் இன்னும் சௌகரியம்.

எம்.எஸ் அம்மாவுக்கு வீணை வாசிக்கத் தெரியும். செம்பைக்கு வயலின், புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். லால்குடிக்கு அருமையாகப் பாட வரும். பாலமுரளி ஜம்மென்று வயோலா வாசிப்பார். டி.கே.மூர்த்தி, குருவாயூர் துரை, வேலூர் ராமபத்ரன், காரைக்குடி மணி, ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ் போன்ற பல மிருதங்க வித்வான்கள் அருமையாகப் பாடி கச்சேரியே நடத்தியுள்ளார்கள். அந்த வரிசையில் வயலினை பக்க வாத்தியமாக பல முன்னணிக் கலைஞர்களுக்கு வாசித்து, பிறகு வாய்ப்பாட்டில் பிரபலமாகியுள்ள கலைஞர்கள்தான் ரஞ்சனி - காயத்ரி. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் நன்கு பதியும். இரண்டு பேரும் சேர்ந்து சங்கீதத்தை ஒரு குரல் போல பாடினா லும் சொக்கத்தான் செய்கிறது.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபையில் ரஞ்சனி - காயத்ரியின் கச்சேரி. பாட்டு பாடுபவர்களுக்கு இன்னொரு வாத்தியம் வாசிக்கத் தெரிந்து, அதை அனுபவிக்க முடியும் என்றால், அது பெரிய உதவியாகத்தான் இருக்கும். அதேபோல, வாத்தியம் வாசிக்கும் கலைஞர்களுக்கும் சங்கீதம் பாடத் தெரிந்தால் இன்னும் சௌகரியம்.

எம்.எஸ் அம்மாவுக்கு வீணை வாசிக்கத் தெரியும். செம்பைக்கு வயலின், புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். லால்குடிக்கு அருமையாகப் பாட வரும். பாலமுரளி ஜம்மென்று வயோலா வாசிப்பார். டி.கே.மூர்த்தி, குருவாயூர் துரை, வேலூர் ராமபத்ரன், காரைக்குடி மணி, ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ் போன்ற பல மிருதங்க வித்வான்கள் அருமையாகப் பாடி கச்சேரியே நடத்தியுள்ளார்கள். அந்த வரிசையில் வயலினை பக்க வாத்தியமாக பல முன்னணிக் கலைஞர்களுக்கு வாசித்து, பிறகு வாய்ப்பாட்டில் பிரபலமாகியுள்ள கலைஞர்கள்தான் ரஞ்சனி - காயத்ரி. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் நன்கு பதியும். இரண்டு பேரும் சேர்ந்து சங்கீதத்தை ஒரு குரல் போல பாடினா லும் சொக்கத்தான் செய்கிறது.

அன்றைக்கு ‘என்றைக்கு சிவக்ருபை’ கீர்த்தனையை ரெண்டு பேரும் சேர்ந்து பாடின விதம், உருக்கியது. அன்று வயலின் கணேஷ் பிரசாத். மிருதங்கம் சுதீந்திரா. கடம் வாசித்த கலைஞர் சிவராமகிருஷ்ணன். கச்சேரியில ஸாவேரி ராகத்தை காயத்ரி ரொம்ப அருமையாகப் பாடி மனதை நிறைத்தார். முத்துஸ்வாமி தீட்சிதரின் ‘கரிகலபமுகம்’ கீர்த்தனை அருமையோ அருமை.
ஸ்ருதி சுத்தம், சாகித்யம் பளிச் என்று கேட்கும் சாரீரம்... இப்படி பல சொத்துகளுக்கு அதிபதிகள் ரஞ்சனி, காயத்ரி. டுண்டி கணேசர் பற்றி முத்துஸ்வாமி தீட்சிதர் எழுதிய கீர்த்தனையில் ‘நீலக்ரீவ குமாரம்’ என்ற இடத்தில் நிரவல் ரஞ்சனி - காயத்ரி பாட, காவேரி புரண்டு வருவது போல ஸாவேரியை கணேஷ் பிரசாத் வாசிக்க, ஹாலில் வெள்ள மயம்தான்.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் காலை நேரம் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி. இடம் கிடைக்காதோ என்று பலபேர் பெட் காபியோடு ஓடி வந்து சபாவில் இடம்பிடித்துவிட்டனர். கிருஷ்ணாவின் சங்கீதம் மனதைத் தொட்டு, எல்லோரையும் கண்ணை மூடி தியானம் செய்யும் நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. ‘ஏமானதிச்சேவோ’ என்ற ஸஹானா கீர்த்தனையில் தியாகராஜர் ராமரைப் பார்த்து, ‘‘ராமா... என்னால் வணங்கப் பெற்றவனே! ஒளிமயமானவனே! கீர்த்தி, ஆயுள், பக்தி, நினைத்த மனம் ஆகியவற்றைக் கொடுப்பவனே’’ என்று கூறுவதை கிருஷ்ணா பாட, ரசிகர்கள் முகமும் ஒளிமயமாகி இசையில் ஐக்கியமாகி விட்டார்கள்.

தோடி ராகத்தை கிருஷ்ணா பாட, அக்கரை சுப்புலக்ஷ்மி வயலினில் குழைந்து கொடுக்க, ஓடோடி வந்த ரசிகர்கள் ‘கோடி கொடுத்தாலும் இது கிடைக்காது’ என்று முடிவோடு அனுபவித்தார்கள். ‘வழி மறைத்திருக்குதே’ என்ற கீர்த்தனையை பாரம்பரியமாக தோடியில்தான் பாடி வந்திருக்கிறார்கள். விளம்ப காலத்தில் அந்தக் கீர்த்தனையை கிருஷ்ணா அனுபவித்துப் பாட, அருண்ப்ரகாஷ் மிருதங்கத்தில் ‘நம்’, ‘திம்’ ‘அரைசாப்பு’, ‘சாப்பு’ என்று பல சொற்களை வாசித்து பாட்டோடு ஐக்கியம் ஆகிவிட்டார். கிருஷ்ணா முகாரி ராகம் பாடி, ‘ஒசோசி’ என்ற பதத்தையும், ‘வதஸியபி’ அஷ்டபதியும் பாடி முடிக்க, முக்கால்வாசி கச்சேரி முடிகிற நேரத்தில் தனி ஆவர்த்தனத்தையும் அருண், சந்திரசேகர சர்மா கடத்தோடு பிரமாதமாக வாசித்தார். இந்த நிகழ்ச்சிக்கு ‘ஒசோசி’ பதம் ரொம்ப சிகரம். யாருக்கும் கச்சேரிக்கு நடுவில் மெயினாக பதம், அஷ்டபதி பாடுவதற்கு தைரியம் இருக்காது. என்ன பாடினாலும், கிருஷ்ணா குரலில் உள்ள இனிமை, குளுமை எல்லாம் ரசிகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.

மல்லாடி சகோதரர்கள் கச்சேரி கிருஷ்ண கான சபையில். நேதநூரிகாரு சிஷ்ய பரம்பரையில் இந்த இருவர் பாட்டு, சுநாதம். லால்குடி ஜெயராமன் வர்ணம் அஸாவேரி ராகத்தில் ஆரம்பித்த கச்சேரி, களை கட்டியது. ‘நே நெந்து வெத குதுரா’ என்ற கர்நாடக பெஹாக் கீர்த்தனையைத் தொடர்ந்து பாட, எம்பார் கண்ணன் வயலினிலும், திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கத்திலும், கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சிராவிலும் மெருகூட்டினர். ராகம் பாடுகிற அழகு மல்லாடி சகோதரர்களிடம் பரம சுகமாக இருக்கிறது. ஆபோகி ராகத்தை ‘ஆஹா’வென்று அவர்கள் பாட, கண்ணன் வாசித்த விதம் ஓஹோ. ஸ்வரம் பாடும்போது மத்யமத்தில் நின்று பாட, உஸ்தாத் ஸ்டைலில் அமர்க்களப்பட்டது கச்சேரி.

‘மாதங்கி’ என்ற ரமாமனோஹரி ராகம், மல்லாடி குரலில் மனதைத் தொட்டது. இதையே ராமப்ரியா ராகம் என்றும் கூறுவார்கள். ‘ரமாமனோஹரி ராகேந்து சேகரி’ என்ற இடத்தில் நிரவல். இந்த நிரவல் பாடிய இடம், பொருள்பட இருந்தது. ஒரு கல்யாணக் கச்சேரியில் பாகவதர் ஒருத்தர் ‘மதுராபுரி நிலயே மணி வலயே’ என்ற இடத்தை எடுத்துக் கொண்டு, ‘மணிவலயே’வையே ரொம்ப நேரம் திரும்பத் திரும்பப் பாட, கச்சேரி கேட்க வந்த விச்வநாதய்யரால் சகிக்க முடியவில்லை. கல்யாண வீட்டாரைக் கூப்பிட்ட அவர், ‘‘இவர் ரொம்ப நேரமா ‘மணி வலயே’ங்கறார். அவருக்குப் பேசின பணத்தைக் குடுத்துடுங்கோ. இல்லாட்டி மேல போக மாட்டார்’’ என்றாராம்.

மல்லாடி சகோதரர்களின் மெயின் சஹானா ராகம், கீர்த்தனை, பக்தவத்சலம், கே.வி.ஜி தனி எல்லாம் சேர்ந்ததால் கிருஷ்ண கான சபையே மயங்கியது.
சுஷ்மா சோமசேகரன் பாட்டு, பார்த்தசாரதி சபையில்! தேன் போல ஒலித்தது அவர் குரல், நல்ல பாடம், தெளிவான வார்த்தைகள் என பல சிறப்பம்சங்கள் அவர் கச்சேரியில். ஹிந்தோளத்தில் ‘பத்மநாப பாஹி’, தர்பாரில் ‘ராமாபி ராம’ கீர்த்தனைகள் ரொம்ப ருசி. பூர்விகல்யாணி ராகம் ரொம்ப அருமை. ‘ஈ ராம நாம’ கீர்த்தனை கேட்டு ரொம்ப நாள் ஆகிறது. ஸ்ரீவித்யா ஆர்.எஸ்.ஐயர் வயலின் சுகமாக இருந்தது. தோடி ராகத்தை அழகாக, விஸ்தாரமாகப் பாடி, ஸ்ரீ வெங்கடேசம் கீர்த்தனையை சுஷ்மா ஸ்பஷ்டமாகப் பாடினார். சுமேஷ் நாராயணன் மிருதங்கம் ரொம்ப சௌக்கியம். சுஷ்மாவுக்கு கர்நாடக சங்கீத உலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
படங்கள்: புதூர் சரவணன், தமிழ்வாணன்