‘‘வேதியியல் வினாத்தாளில் வெகு சுலபமாக பதிலளிக்கக் கூடியவை மூன்று மார்க் கேள்விகளே. கனிம, கரிம, இயற்பியல் வேதியியல் மூன்றிலிருந்தும் தலா 7 வீதம் மொத்தம் 21 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதில் 15க்கு விடையளிக்க வேண்டும். 5 மார்க் கேள்விகள் போல், ‘ஒவ்வொரு பிரிவிலிருந்தும் குறைந்தது இத்தனை கேள்விக்கு விடையளிக்க வேண்டும்’ என்ற கண்டிஷன் இதில் கிடையாது. எனவே எல்லா பாடங்களையும் புரட்டத் தேவையில்லை. சில முக்கியக் குறிப்புகளைக் கடைப்பிடித்தாலே போதும்’’ என்கிறார் வேதியியல் ஆசிரியர் ராஜு. அந்தக் குறிப்புகள் இங்கே...
வினாத்தாள் வடிவமைப்பின்படி மொத்தமுள்ள 22 பாடங்களில்
1) எஃப் தொகுதி தனிமங்கள்
2) அணைவு, உயிரியல் அணைவுச் சேர்மங்கள்
3) மின் வேதியியல் - 2
4) ஈதர்கள்
5) உயிர்வேதி மூலக்கூறுகள்
போன்ற பாடங்களிலிருந்து 3 மார்க் கேள்விகள் கேட்கப்படுவதில்லை.
கணக்கு கேள்விகள் ஒன்றோ, இரண்டோ கேட்கப்படலாம். அவை ‘கரிம நைட்ரஜன் சேர்மங்கள்’ பாடத்திலிருந்தே அதிகம் கேட்கப்படுகின்றன.
சாய்ஸ் அதிகம் இருப்பதால் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ‘கரிம வேதியியல்’ படிப்பதை சிரமமாக நினைத்தால், கனிம, இயற்பியல் வேதியியலில் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கலாம்.
அடுத்ததாக ஐந்து மதிப்பெண் கேள்விகள். மூன்று பிரிவும் சேர்த்து 12 கேள்விகள் இருக்கும். அதில் 7 கேள்விகளுக்கு விடையளித்தால் போதும். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் 2 கேள்விகளுக்காவது கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் சில முக்கியமான கேள்விகளை வினாத்தாள் வடிவமைப்பின்படி பார்க்கலாம்.
கேள்வி எண் பாடம்
52 அணு அமைப்பு
53 டி தொகுதி தனிமங்கள்
54 எஃப் தொகுதி தனிமங்கள்
55 அணைவுச் சேர்மங்கள்
‘டி தொகுதி தனிமங்கள்’ பாடத்தைப் பொறுத்தவரை,
உலோகம் பிரித்தெடுத்தல் (ஞீஸீ,கிu,கிரீ,சிக்ஷீ), மற்றும் அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் குரோமியம் பெறுதலைப் படத்துடன் விளக்கக் கேட்கலாம்.
எஃப் தொகுதி தனிமங்கள் பாடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்...
மோனாசைட் மண்ணிலிருந்து லாந்தனைடுகள் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன?
லாந்தனைடு குறுக்கம் என்றால் என்ன? அதன் காரணம் மற்றும் விளைவு யாது?
லாந்தனைடு மற்றும் ஆக்டினைடுகளின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பயன்கள் யாவை?
‘அணைவுச் சேர்மங்கள்’ பாடம் மிகவும் முக்கியமானது. காரணம், இதிலிருந்து அதிக கேள்விகள் வருகின்றன. அவை 10 மார்க் கேள்விகளிலும் கை கொடுக்கின்றன. அந்தக் கேள்விகள்...
வெர்னரின் அணைவுச் சேர்மக் கொள்கை
ஹீமோகுளோபின் அமைப்பு மற்றும் செயல்பாடு
குளோரோபில் தாவரத்தில் செயல்பாடு
அயனிமாற்றியம் மற்றும் அணைவு மாற்றியம்
இணைதிறன் பிணைப்புக் கொள்கையின் கருத்துருக்கள் யாவை?
கேள்வி எண் பாடம்
56 வெப்ப இயக்கவியல்
57 வேதிச்சமநிலை
58 வினைவேகவியல்
59 மின்வேதியியல் - 2
வெப்ப இயக்கவியலின் முக்கியக் கேள்விகள்...
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகள் யாவை?
என்ட்ரோபியின் சிறப்பியல்புகள் யாவை?
கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகள் யாவை?
தன்னிச்சை செயல்முறைகளுக்கான நிபந்தனைகள் யாவை?
டிரவுட்டன் விதி யாது? அதிலிருந்து விலகலடையும் சேர்மங்கள் எவை?
‘வேதிச்சமநிலை’ பாடத்தின் ரிப்பீட் கேள்விகள்...
ரிஜீ, ரிநீ இடையே உள்ள தொடர்பை வருவி.
றிநீறீ5 சிதைவடைதலுக்கான ரிஜீ, ரிநீ கோவையை வருவி.
லீசாட்லியர் தத்துவத்தை பயன்படுத்தி ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தல்
லீசாட்லியர் தத்துவத்தைப் பயன்படுத்தி தொடுமுறையில் ஷிளி3 தயாரித்தல்
‘மின் வேதியியல் - 2’ பாடத்தின் முக்கியக் கேள்விகள்...
நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை வருவி
கட்டிலா ஆற்றலுக்கும் ணிவிதிக்கும் உள்ள தொடர்பை வருவி
மின்கலத்தைக் குறிப்பிடும் மிஹிறிகிசி விதிகள் யாவை?
டேனியல் மின்கலம் பற்றி குறிப்பு வரைக
அரை மின்கலத்தின் மின் இயக்க விசையை எவ்வாறு கண்டறிவாய்?
மின்கல அறிவியலில் காணும் சொற்றொடர்கள் ஐந்தினை விவரி.
கேள்வி
எண் பாடம்
60 ஈதர்கள்
61 கார்பனைல் சேர்மங்கள்
62 கார்பாக்சிலிக் அமிலங்கள்
63 நடைமுறை வேதியியல்
‘ஈதர்கள்’ பாடத்தின் முக்கியமான வினாக்கள்...
அலிபாட்டிக் மற்றும் அரோமாட்டிக் ஈதர்களுக்கிடையே உள்ள வேறுபாடு யாது?
டை எத்தில் ஈதர் தயாரிக்கும் மூன்று முறையை விவரி
அனிசோல் தயாரிக்கும் முறைகளை விவரி
ஈதர்களில் காணப்படும் மாற்றியங்களை விளக்கு
ஈதர்கள் எவ்வாறு பிமி உடன் வினைபுரிகின்றன? இவ்வினையின் முக்கியத்துவம் யாது?
‘நடைமுறை வேதியியலில்’ அடிக்கடி கேட்கப்படுபவை...
ராக்கெட் உந்திகள் பற்றி சிறு குறிப்பு வரைக
எதிர் உயிரிகள் பற்றி குறிப்பு வரைக
நிறம் உறிஞ்சி மற்றும் நிறம் தோற்றுவிப்பாளர் பற்றிய ‘ஓட்டோவிட்’ கொள்கை யாது?
பியூனா ரப்பர்கள் பற்றிக் குறிப்பு வரைக
‘பியூனா-எஸ்’ மற்றும் நைலான்-66 எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
இந்த வரிசையில் சில பாடங்களிலிருந்து (அணு அமைப்பு, வினைவேகவியல், கார்பனைல் சேர்மங்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள்) அரிதாகவே கேள்விகள் வருகின்றன. அத்தகைய பாடங்களுக்கு நேரம் செலவழிக்காமல் சாய்சில் விட்டுவிடலாம்’’ என்கிறார் ராஜு.
கடந்த காலங்களில் அதிக மாணவர்கள் சென்டம் வாங்க வழிகாட்டியதுடன், மாநில அளவில் ரேங்க் வாங்கவும் வைத்தவர் நாமக்கல் ஆசிரியர் துரைசாமி. ‘‘வேதியியலைப் பொறுத்தவரை, பாடங்களோட எண்ணிக்கை அதிகமா இருந்தாலும், சென்டம் வாங்கணும்னா எல்லா பாடங்களையும் படிக்கணும்னு அவசியம் இல்ல. காரணம், இந்த வினாத்தாள் வடிவமைப்புதான். பாடங்களை செலக்ட் பண்ணிப் படிக்கறப்ப நிறைய நேரம் மிச்சமாகுது. அந்த நேரத்தை முக்கியமான பாடங்கள்ல செலவழிக்கலாம்’’ என்கிறார் இவர். பத்து மார்க் வினாக்களை அடுத்த இதழில் பார்க்கலாம்.
தொகுப்பு:
அய்யனார் ராஜன்
படங்கள்:
தமிழ்வாணன்மூணு பாயின்ட் முக்கியம்!
சென்டத்துக்கும் தனக்கும் ‘கெமிஸ்ட்ரி’ வொர்க் அவுட் ஆன ரகசியத்தைச் சொல்கிறார் கடந்த ஆண்டு வேதியியலில் சென்டம் போட்ட ராமநாதபுரம் ஸ்வேதா. ‘‘3, 5 மார்க் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் குறிச்சுத் தந்த கேள்விகளை மட்டுமே படிச்சிட்டுப் போனேன். அதுவே சென்டம் வாங்க போதுமானதா இருந்தது. மூணு மார்க் கேள்விக்குப் பதில் எழுதறப்ப விடை மூணு பாயின்ட்டுக்குக் குறையாம இருக்கற மாதிரி பார்த்துக்க வேண்டியது அவசியம்!’’