அல்பம் அலமேலு




*  ‘‘வீணா பயப்படாதீங்க... இப்பல்லாம் வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தாத்தான் பெரிய ஆளுன்னு நம்பறாங்க. அதான் நம்ம வீட்டுக்கும் ரெய்டு வரப் போறதா, பக்கத்து ஆத்து மாமிகிட்ட புளுகிவிட்டேன்!’’

*  ‘‘நாம ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம்னு ஊருக்கே தெரியும். இன்னைக்கு மார்க்கெட் 17 புள்ளி ஏறி இருக்குல்ல... அதை எல்லோருக்கும் காட்டத்தான் இந்த போர்டு!’’

*  ‘‘பெட்ரோல் விலை ஏறினாலும் ஏறுச்சு. அலமேலு எப்போ பார்த்தாலும் நம்ம காதுபட, ‘பத்து லிட்டர் பெட்ரோல் போட்டுட்டு வாங்க’ன்னே சொல்றா பாரு!’’

*  ‘‘சொன்னா புரிஞ்சுக்க முனியம்மா! இப்ப எல்லாமே ஆன்லைன் ஆயிடுச்சு. உன்னோட அக்கவுன்ட்ல சம்பளத்த போட்டுடறேன்... போ!’’

*  ‘‘ஏண்டி! உன் பந்தாவுக்கு ஒரு அளவே இல்லையா? பக்கத்து வீட்ல பார்க்கணும்னு டாமிக்கு கம்ப்யூட்டர் கத்துக் குடுத்துக்கிட்டிருக்கே?’’

*  ‘‘இந்த மாசத்துல மூணு வாட்டி நீங்க மிச்சம் ஒரு ரூபா தரல... அதையே டிப்ஸா வச்சுக்குங்க!’’