தத்துவம் மச்சி தத்துவம்





‘‘என்னய்யா இது... ஹீரோயினை விட ஹீரோ குள்ளமா இருக்காரு?’’
‘‘அதான் சொன்னேனே சார்... அவர் ஒரு ‘வளரும் நடிகர்’னு!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

என்னதான் ஏசி தியேட்டரா இருந்தாலும், படம் சரியில்லேன்னா காத்து வாங்கும்!
- ஆளில்லா தியேட்டரில் பயந்துகொண்டே நைட் ஷோ பார்ப்போர் சங்கம்
- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.

தமிழார்வம் உள்ள ஒருவர், அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால்னு முப்பாலையும் ‘கரைச்சுக் குடிக்கலாம்’. ஆனா, ஒருநாளும் ஆவின் பால் போல் ‘காய்ச்சி’ குடிக்க முடியாது!
- பால் குடித்தபடியே பாலானதையும் யோசிப்போர் சங்கம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘அவர் போலி டாக்டர்னு
எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘உடல்நடுக்கம் மாதிரியே நிலநடுக்கத்துக்கும் அவர் கிட்ட மருந்து இருக்குங்கறாரே!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

‘‘மன்னர் காலையிலேயே துப்பாக்கியை துடைக்கிறாரே... போருக்கோ, வேட்டைக்கோ போறாரா?’’
‘‘ம்ஹும்,அது வெறும்‘நிuஸீ’ துடைப்பு!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘கோர்ட்டுக்கு வந்துட்டு, என் கேள்விக்கு ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறே கபாலி..?’’
‘‘என்னோட வக்கீல் கொஸ்டீன் எதையும் இன்னும் லீக் பண்ணல எசமான்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘தலைவர் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காரே... ஏன்?’’
‘‘மேடையில் பேசும்போது எவனோ ஒருத்தன் தலைவர்மேல புதுச்செருப்பை வீசிட்டானாம்!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.