‘ஏதோ ஒன்றின்’ கையில் பூமாலையாக, இன்று ஆட்சியாளர்கள் கையில் சட்டம் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில், சட்ட நிபுணர்கள் எடுத்து வைத்த இருவேறு கருத்துகளும் சிந்திக்க வேண்டியவை!
எம்.சாரதாமணி, கோவை-24;
அ.சுகுமார், காட்டுக்கானூர்.
‘எழுத்தும் எனர்ஜியும்’ படித்தேன். எழுத்தாளர் முகனின் முகத்தை இதில் பார்க்க முடிகிறது. சினிமாவிற்காக புறப்பட்டு ஜோதிடரானவர் இன்று அதே சினிமாவில் கால் பதித்திருக்கிறார் என்றால் அவருக்கு குரு உச்சம்தானே!
எஸ்.வி.எஸ். மணியன், கோவை;
யு.கே.ராஜேந்திரன், சென்னை.
வட இந்தியாவில் ‘கிராமத்து சயின்டிஸ்ட்’களை தேடிக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிமுகம் செய்துவரும் அனில் குப்தாவின் சேவைக்கு க்ளாப்ஸ். நம் தமிழக கிராமங்களிலும் இதை அவர் செய்யக் கூடாதா என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலிட்டது.
பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.
கொத்தனார் சம்பளமே 15 ஆயிரத்துக்கு மேல் போய் விடுகிற இந்தக் காலத்தில், 15 ஆயிரத்தில் வீடு கட்டலாம் என்ற கட்டுரை, மிடில் கிளாஸ் வயிற்றில் மில்க் வார்த்துவிட்டது!
செங்குட்டுவன், வேலூர்.
மூளைச்சலவை செய்யப்பட்டு இன்று மரணத்தின் விளிம்பில் நிற்கும் தீவிரவாதி கசாப் பற்றிய கட்டுரை படித்தேன். அவன் விடுதலை பெற்றாலும் மரணம் அவனைத் துரத்தும் என்பதைப் படிக்கும்போது தீவிரவாதத்தின் கனபரிமாணம் புரிகிறது.
எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.
கலைஞானி கமல் ‘மேக்கப் ஞானி’யாக அவதாரம் எடுத்த போஸ் அசரடித்தது. என்றென்றும் அவர்தான் சகலகலா வல்லவன் என்று உணர்த்தியது அந்தக் கட்டுரை!
கன்யாரி, நாகர்கோவில்; த.சத்தியநாராயணன்,
அயன்புரம்.
குழந்தைக்கு கண்ட கண்ட பாலைக் கொடுக்காமல் பசும்பால் கொடு என்பார்கள். அந்தப் பசும்பாலே ரத்தசோகை, எலும்பு நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை உருவாக்கும் என்
கிறபோது, தாய்ப்பாலுக்கு நிகர் வேறெதும் இல்லை
என்பது புரிந்தது.
வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை.
தமிழ்நாட்டுல கேரள நடிகைக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. மும்பை நடிகைக்கும் ஒரு மரியாதை இருக்கு. கேரளாவைக் கலக்கிட்டிருக்குற மும்பை நடிகை இஷா, ‘தில்லு முல்லு’ல நடிக்கப் போறாங்களா? அப்போ படம் சரியான ‘ஜில்லு முல்லு’தான் போங்க!
அண்ணாமலை,
சிவகாசி.