நயம்பட பேசு





மெஹந்தி போட்டா வதந்தி, வட இந்தியர்கள் மேல வதந்தி, நாட்டுல வாந்தி எடுக்கிறவனை விட வதந்தி எடுக்கிறவன் அதிகமாயிட்டானுங்க. ‘பொறந்த குழந்தை பேசுச்சு’ன்னு ஒருத்தன் புரளிய கிளப்பிவிட்டா, ‘செத்த கிழவி சமைஞ்சுச்சு’ன்னு இன்னொரு பக்கம் அடிச்சு விடுறாங்க. நம்மாளுங்கள என்னைக்குமே திருத்த முடியாது. இப்படிப் பரப்புற புரளியினால நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல. ஆனா, ‘தங்கச்சிக்கு பச்ச புடவை வாங்கிக் கொடு’, ‘அண்ணனுக்கு அண்டிராயர் வாங்கிக் கொடு’ன்னு ஆளாளுக்கு செலவுதான் வைக்கிறாங்க பக்கிப் பயலுங்க. அதனால, கீழ்க்கண்ட ‘நல்ல வதந்திகளை’ நாமளும் பரப்புவோம் வாருங்கள் எனதருமை கில்மா விரும்பிகளே!

*  ஆல் மினிஸ்டர்ஸ் அட்டென்ஷன் ப்ளீஸ்! இடது கால் செருப்பை வலது காலிலும், வலது கால் செருப்பை இடது காலிலும் மாத்தி போட்டுக்கிட்டு போனாக்கா, அடிக்கடி எல்லாத்தையும் மாத்துற மம்மி கூட உங்க பதவிய மாத்த மாட்டாங்கன்னு அடிச்சு விடுவோம்.

*  பவர் ஸ்டார் போட்டோவை சட்டை பாக்கெட்டுலயோ, மொபைல் ஸ்க்ரீன் வால்பேப்பராவோ வச்சிருந்தா பத்தே நாளுல பயங்கர பப்ளிசிட்டி கிடைக்கும்னு ஒரு பிட்ட போடுவோம்.

*  வாஸ்து படி ஈமு கோழிகள வீட்டுக்குள்ள வளர்த்தா பணம் கொழிக்கும்; கோழீஸ்வரனா இருக்கிறவன் பத்தே மாசத்துல கோடீஸ்வரனா மாறிடுவான்னு பரப்பி விடுவோம். ஆதரவற்ற கோழிகள காப்பாத்துன மாதிரியும் இருக்கும்; வீடு முழுக்க விட்... மன்னிக்க, முட்டை கிடைச்ச மாதிரியும் இருக்கும்.

*  பாவம் புருஷங்க, போனஸ் பணத்தை ஜுவல்லரிக்கு தாரை வார்த்தே டர்ர்ராகி நிக்கறாங்க. நிலாவுல பாட்டி சுட்டுக்கிட்டு இருந்த வடையில ஒண்ணு பூமில விழுந்துடுச்சு; அதனால பொம்பளைங்க தங்க நகைக்கு பதிலா, வடமாலை போட்டுக்கிட்டு ஒரு வருஷம் சுத்தணும்னு பட்டாசு போடுவோம்.

*  புள்ளைங்க லேட்டா எந்திரிக்கிறாங்களா? குட்டியானந்தா மாதிரி படுக்கையில இருந்து குபீருனு குதிச்சு எழுந்தா, மஞ்சிதா மாதிரி குட் ஃபிகர் கிடைக்கும்னு குண்டு வைப்போம். பசங்க அப்புறம் விடியக்கால அஞ்சு மணிக்கே பல்டி அடிச்சு எந்திரிக்க மாட்டாங்க?

*  பாவம்யா பசங்க... செலவு பண்ணியே செதஞ்சு போறாங்க. வாரம் ஒரு நாள் பொண்ணுங்க பசங்களுக்கு செலவு பண்ணினா, அவனை விட நல்ல பாய் ஃபிரண்டு கிடைப்பான்னு தெளிச்சு விடுவோம். ஒரு நாளைக்கு மூணு தடவைக்கு மேல மிஸ்டு கால் கொடுத்தா, மொபைல புடிக்கிற கை, மிஸ்டு கை ஆகிடும்னு பயம் காட்டுவோம். அதிகமா அரட்டை அடிச்ச பொம்பளையும், அதிகமா கொறட்டை விட்ட ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு தெறிக்க விடுவோம்.

*  ஆனா எவ்வளவுதான் புரளி பரப்பினாலும், யாருமே நம்பாத ஒரு புரளி உண்டு. அது... ‘தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டாங்க!’

நம்ம நாட்டுல ஆடு நடக்குது, மாடு நடக்குது, அதை மேய்க்கிற ஆயா கூட நல்லபடியா நடக்குது. ஆனா இவங்களையெல்லாம் கட்டிக் காக்க வேண்டிய அரசியல்வாதிகள் இருக்கற நாடாளுமன்றம் மட்டும் நடக்க மாட்டேங்குது. ‘அங்கிள்... இன்னைக்கு பார்லிமென்ட் நடந்துச்சு’ன்னு சொல்லிட்டு, ‘அப்படியாம்மா’ன்னு கேட்கிற என்னை பார்த்து ‘ஏப்ரல் ஃபூல்’ சொல்லிட்டுப் போகுது பக்கத்து வீட்டுக் குழந்தை. வேணா பாருங்க... கசாப் கூட தன்னோட கடைசி ஆசையா, ‘நாடாளுமன்றம் நடக்கிறதைப் பார்க்கணும்’னு சொல்லப் போறான். அப்புறம் அம்பது வருஷத்துக்கு கவலைப்படாம ஜெயிலுக்குள்ள பிரியாணி திங்கப்போறான்.

அம்மாவோட சொத்துக் குவிப்பு வழக்கை விட அதிகமா ஒத்தி வைக்கப்பட்டது நம்ம நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றத்தை நடத்த விடாம இழுத்தடிக்கிற எதிர்க்கட்சிகளை கலங்கடிக்க காங்கிரஸ் அரசுக்கு சில யோசனைகள்...

*  ‘பூகுல்காந்திக்கு பொண்ணு பார்க்கப் போறோம்... வந்து கலந்துக்கங்க’ன்னு எம்.பிக்களுக்கு தகவல் சொல்லியனுப்பி, வரவங்கள பொண்ணு வீட்டுக்குள்ளயே அமுக்கி நாடாளுமன்றத்தை நடத்திடலாம். அடுத்தடுத்த மசோதாக்களை தாக்கல் செய்யறதுக்கு இருக்கவே இருக்கு, கிதம்பரத்துக்கு காது குத்து, அம்பிகா போனிக்கு மூக்கு குத்து, பி.கே.ஆண்டனிக்கு முதுகுல பச்ச குத்து விழாக்கள்.

*  நீங்க ஒழுங்கா அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாட்டி, மெகா சீரியல்ல வர்ற மாதிரி ‘இவருக்குப் பதிலாக இவர்’னு வேற ஒருத்தர எம்.பியாக்கி விட்டுடுவோம்னு மிரட்டலாம்.

*   உங்கள் மன்மோகன் பேசுகிறார், எங்கள் மன்மோகன் பாடுகிறார், நம்ம மன்மோகன் ஆடுகிறார், அவரை பொம்மையென திட்டும் அனைத்து எதிர்க்கட்சிகளும் சந்தேகம் இருந்தா நாடாளுமன்றம் வந்து பாரீர்னு போஸ்டர் ஒட்டலாம். ஆர்வக்கோளாறுல எதிர்க்கட்சி எம்.பிகள் எட்டிப் பார்க்கிறப்போ, டபால்னு கதவை சாத்தி வெளிய பூட்டிரலாம்.

*   நாடாளுமன்ற கேன்டீன்ல பாதி விலைக்கு வெங்காய பஜ்ஜி தரலாம். ஒண்ணு வாங்குனா ரெண்டு பஜ்ஜி ஃப்ரீன்னு ஆஃபர் தரணும். எதுவும் பேச விடாம, பதினோரு பேரு கொண்ட குழுவ வச்சு பஜ்ஜிய கொடுத்துக்கிட்டே இருக்கலாம். அப்படியும் தின்னுட்டு எஸ்கேப் ஆகப் பாத்தா, காபில தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளயே தூங்க வச்சிடணும்.

*   ஐ.பி.எல் சியர் லீடர்ஸை, ‘என் செல்லப் பேரு ஆப்பிள்... நீ சைசா கடிச்சுக்கோ’, ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ போன்ற இலக்கியத் தரமான பாடல்களைப் போட்டு ஆடவிட்டா அட்டெண்டன்ஸ் இம்ப்ரூவ் ஆகிடாது?  

*   பார்லிமென்ட்டுக்கு வராத எம்.பிகள் வீட்டுக்கு நம்ம கேப்டனே நேரா போயி, ‘நாடாளுமன்றம் நடக்காமப் போனா எத்தனை கோடி நஷ்டம், எத்தனை டீ காபி வேஸ்ட், எவ்வளவு கரன்ட் ஓடுச்சு, எவ்வளவு பெட்ரோல் வீணாச்சு’ போன்ற செலவுக் கணக்கு புள்ளிவிவரங்களை ஒண்ணு விடாம ஒப்பிப்பாருனு பயத்தக் கிளப்பி விட்டா, எல்லோரும் ஒழுங்கா வந்துட மாட்டாங்க?

*   நம்ம நரம்படி நாராயணசாமி நாடாளுமன்ற கட்டிடத்தைத் தூக்கப் போறாருன்னு வதந்தியப் பரப்பி, பார்க்க வர எம்.பிகள் வேட்டி சட்டைய புடுங்கி வச்சுக்கிட்டா, யாரும் வெளிய போக முடியாது.

*   இவ்வளவு பண்ணியும் அவை நடக்கலைனா, நம்ம ‘தல’ய எம்.பியாக்கி உள்ளே நடக்க விடலாம். நாடாளுமன்றம்தான் நடக்கல, நாடாளுமன்றத்துக்குள்ளயாவது யாராவது நடக்கட்டுமே!
(பேசுவோம்)

கிச்சு கீச்சு

மிஷ்கின் ஜீவாவுக்கு பதில் டி.ஆரை நடிக்க வச்சிருந்தா, படத்துக்குப் பேரு ‘முகமுடி’ன்னு வச்சிருந்திருப்பாரோ?
ஈமு கோழி போயி இப்ப நாட்டுக் கோழியாம். அய்யா தமிழர்களே, நல்லா கவனிங்க... நம்ம நாட்டுல லாபம் தர்ற ஒரே கோழி க்ஷிவீக்ஷீணீt ரிஷீலீ*  வீ மட்டுந்தான்