கரன்ட் கபாலி





‘‘வருங்காலத்துல நாடு பூராவும் ஆன்லைன் பிசினஸ் வந்துடும்னு பேப்பர்ல படிச்சிருக்கான்... அதான் கம்ப்யூட்டரைப் போட்டு நோண்டிக்கிட்டு இருக்கான்!’’

‘‘யோவ் த்ரீ நாட் த்ரீ... மோப்ப நாயை அந்தாண்ட இழுத்துட்டுப் போய்யா! அது மர்மப் பெட்டி இல்ல... கபாலியோடதுதான்! மாமூல் கொடுக்க வந்தப்ப மறந்து வச்சுட்டுப் போயிட்டேன்னு இப்பதான் போன் பண்றான்...’’

‘‘ஜட்ஜய்யா! வூடு பூந்து திருடினதுக்கு என்ன தண்டனை வேணா குடுங்க... ஆனா, வூட்ட பூட்டாம தொறந்து போட்டுத் தூங்கி, என்னை திருடத் தூண்டின வூட்டுக்காரனுக்கு இன்னா தண்டனை?’’

‘‘அடப் போங்க ஏட்டய்யா! போலீஸ் வேலை பண்ணி என்ன சாதிச்சீங்க? முதுகுவலிக்கு அமிர்தாஞ்சன் தடவிக்கிட்டு இருக்கீங்க... என்னோட இடுப்பு வலிக்கு நாளைக்கு நான் ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட் எடுக்கப் போறேன்!’’

 ‘‘கபாலியோட சேட்டையை பார்த்தீங்களா சார்? டிராஃபிக்ல வண்டியில போயி தொழில் பண்ண முடியலையாம்... அதான் ஹெலிகாப்டர் வாங்கினா, லிட்டருக்கு என்ன மைலேஜ் தரும்னு ஏட்டய்யாகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கான்!’’