வெங்கட்பிரபு டைரக்ட் பண்ணப் போற ‘பிரியாணி’ல கார்த்திக்கு ஜோடியாகப் போறது ரிச்சா கங்கோபாத்யாயா. ‘ஒஸ்தி’க்குப் பிறகு பொண் ணுக்கு ரிச்சான சான்ஸ்தான்..!
‘இரண்டாம் உலக’த் தோட ஜார்ஜியா ஷெட்யூலை முடிச்சுக்கிட்டு அனுஷ்கா ‘அலெக்ஸ் பாண்டியனோ’ட டூயட் பாடப் போக, அடுத்து இந்தியா வந்த ஆர்யா மும்பைல முகாம் போட்டுட்டார்... விஷ்ணுவர்தன் படத்துல ‘தல’யோட கைகோர்க்க...
ஒருபக்கம் மேக்ஸிம் மேகஸின்ல ‘உரி உரி’ன்னு உரிச்சு போஸ் பண்ணிய ஸ்ரேயா, இன்னொரு பக்கம் ஹீரோயினா நடிக்கிற ‘சந்திரா’வில முழுக்க போர்த்தி சூப்பரா ஒரு களரி பயட் போட்டிருக்கு. அங்கே கழற்றி... இங்கே களரி... நைஸ்..!
லிங்குசாமியோட ‘வேட்டை’ தெலுங்குக்குப் போகுது. இங்கே ஆர்யா நடிச்ச கேரக்டர்ல அங்கே நாக சைதன்யாவும், மாதவன் கேரக்டர்ல சுனிலும் நடிக்கப் போறாங்களாம். சுனில் யாரு தெரியுதில்ல..? ராஜமௌலியால ஹீரோவான காமெடியன்..!
ரொம்ப நாளைக்கப்பறம் ரம்பா அண்ணன் வாசு தயாரிக்கிற படத்துல, தெலுங்கு, மலையாளம்னு 40 படங்களுக்கு கோ-டைரக்டரா இருந்த சுரேஷை தமிழ், தெலுங்கில டைரக்டர் ஆக்கறார். நகுல் ஹீரோவாகிற படத்துல மற்ற தேர்வுகள் போய்க்கிட்டிருக்கு..!
சௌத் இண்டியன் ஹீரோவா நாட்டுப்பற்றுல புல்லரிக்க வச்ச சாய்குமார் ‘பதவி’ங்கிற படத்துல வயசான கெட்டப்ல ஷர்வானந்துக்கு அப்பாவா நடிக்கிறார். பொலிட்டிகல் படமான இதுல கொஞ்சம் வில்லனிக்காவும்
வர்றாராம். ‘அப்பா’ பதவி..?
சுந்தர்.சியோட ‘கலகலப்பு’ தெலுங்கு ரைட்ஸ் பெரிய விலைக்குப் போயிருக்கு. அங்கே ரீமேக்காகிற படத்துல இங்கே ‘போராளி’ல சசியோட நடிச்ச அல்லரி நரேஷ் ஹீரோவாகிறார். ஆந்திராவில கலகலப்பை விட கிளுகிளுப்பு கூடுதலா இருக்குமே..?
புரூஸ் லீ, ஜாக்கி சான் வரிசையில ‘யூ சாங்’ நடிக்கிற ‘தி கிங் ஆஃப் ஸ்ட்ரீட்’ படத்தை மேற்படி 60 படங்களை இந்தியாவில வெளியிட்ட இண்டோ ஓவர்சீஸ் ஃபிலிம்ஸ் ரிலீஸ் பண்றாங்க. இதுக்காக இந்திய நகரங்கள்ல ‘யூ சாங்’ லைவ் ஷோ நடத்தப் போறாராம்.
கௌதம் வாசுதேவ் மேனனோட ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆடியோ வெளியான அன்னைக்குத்தான் யுவனோட பிறந்தநாள். மேடையில யுவன் பாட வந்தப்ப அதை அறிவிச்சு ஆனந்தப்பட்டவர் இசைஞானியேதான். லிவிங்
லெஜண்ட்... லவிங் ஃபாதர்..!
- கோலிவுட் கோயிந்து
சைலன்ஸ்‘லண்டன்’லேர்ந்து வந்த லட்டான வெள்ளைக்காரக் குமரிக்கு நடிப்பு எல்லாம் ஓகேதான். ஆனா நடனம்னு வந்துட்டா கால் கையெல்லாம் ஆட ஆரம்பிச்சுடுமாம். சமீபத்துல ஒரு படத்துல வச்சிருந்த டான்ஸ் சீக்குவன்ஸைக்கூட பொண்ணோட ‘கோரியோ ஃபோபியா’வைப் பார்த்து ‘கேட்வாக்கா’ மாத்தி எடுத்துட்டாங்களாம். பேர்ல மட்டும் ‘ஜாக்ஸன்’ இருந்து வாட் யூஸ்..?
படம் முடியறதுக்குள்ளேயே ஆளாளுக்கு பிரிச்சு மேயற ‘சப்ஸ்டிட்யூட்’ படத்துல இன்னொரு பெரிய டாஸ்க் படத்தோட நீளமாம். லட்ச லட்சமா ஃபுட்டேஜ் காட்டற ஹார்ட் டிஸ்குகளை அடுக்கி வச்சிருக்க படத்தோட எடிட்டர், அஞ்சு பட வேலை இருக்கவே, பேசியதைவிட கூடுதல் பேமென்ட்டுக்கு அப்ளை பண்ண இருக்காராம். அதுக்கு ‘மாற்று’ வைக்க முடியாதே..?