வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்க!





ஒலிம்பிக்கிற்கு முன்...
இப்போதைய கட்டணம்

சாய்னா
ரூ.50 லட்சம்
ரூ.80 லட்சம் -
1 கோடி

சுஷீல்குமார்
ரூ.50 லட்சம்
ரூ.60-80 லட்சம்

ககன் நரங்
ரூ.10-20 லட்சம்
ரூ.25-30 லட்சம்

விஜய் குமார்
ரூ.15 லட்சம்
ரூ.25-30 லட்சம்

மேரி கோம்
ரூ.20-30 லட்சம்
ரூ.50 லட்சம்

யோகேஷ்வர் தத்
.... ரூ.15-20 லட்சம்

யோகேஷ்வர் தத்.... ரூ.15-20 லட்சம்
ஒலிம்பிக்கில் இந்தியர்கள் ஆறு பேர் பதக்கம் வாங்கியதும் பாராட்டுகள், பெருமிதங்களைத் தாண்டி சராசரி இந்தியன் மனதில் எழுந்த முதல் கேள்வி... ‘இவங்கள்லாம் நடிச்ச விளம்பரங்கள் எப்போது டி.வியிலும் பேப்பரிலும் வரும்?’ என்பதுதான்! வெள்ளிப் பதக்கமும் வெண்கலப் பதக்கமும் வாங்கிய ஸ்டார்களை வைத்து தங்கம் குவிக்கும் வாய்ப்பை வியாபார நிறுவனங்கள் சும்மா விடுமா?
இதோ ஆட்டம் ஆரம்பம்... ரேஸில் முந்துவது சாய்னா. மல்யுத்தம், துப்பாக்கி சுடுதலைவிட பாட்மின்டன் அதிகம் பாப்புலர் என்பதால் சாய்னாவுக்கு டிமாண்ட் அதிகம். ஏற்கனவே மூன்று நிறுவனங்களின் கான்டிராக்டில் இருக்கும் அவர், அடுத்த மாதம் இன்னும் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுகிறார். ‘இந்தியாவின் சூப்பர் வுமன்’ என்ற பெருமைக்குரிய மேரி கோமைத் தேடி ஐந்து வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஹெல்த் டிரிங்க்ஸ், பெண்களுக்கான பொருட்கள் என வருகின்றன. ஆண்கள்தான் பாவம். சின்னச்சின்ன வாய்ப்புகளே வருகின்றன. இரட்டை மெடல் மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு ஓரளவு டிமாண்ட் அள்ளுகிறது. யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள்? படத்துக்கு அருகே...
- ராஜிராதா