‘வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படும்’ என்கிற புரளிக்கு பயந்து பதினைந்து நாள் தினம் அஞ்சே அஞ்சு எஸ்.எம்.எஸ்தான் அனுப்பணும்னு தடை போட்டிருக்கு மத்திய அரசாங்கம். இதுக்கே லவ் பண்ற தேவதாஸ் எல்லாம் கோபதாஸா மாறிட்டானுங்க. பல பேரு கோட்டாவுல இருக்கிற அஞ்சு எஸ்.எம்.எஸ்ஸ காதலிக்கு அனுப்பறதா, கள்ளக்காதலிக்கு அனுப்பறதான்னு மண்ட காஞ்சு கிடக்காங்க. ‘தேங்காவுக்குள்ள பாம் இருக்கு...’, ‘கொய்யாக்காவுக்குள்ள குண்டு இருக்கு...’ன்னு இன்னமும் ரெண்டு புரளி வந்தா நிலைமை இன்னும் மோசமாகிடும். ‘இந்திய குடிமக்கள் தினம் மூன்றே வார்த்தைகள்தான் பேசணும்’னு அப்ப அரசாங்கம் சொன்னாலும் ஆச்சரியமில்ல! அப்படி ஆகிட்டா, பிரபலங்கள் எல்லாம் என்ன பேசறதுன்னு தவிச்சுப் போயிட மாட்டாங்க? அதான் அவங்க டைரில குறிச்சு வச்சு மனப்பாடம் பண்ண, நம்மளாலான மூணு வார்த்தை குறிப்புகளும் ஹெல்ப்புகளும். இது கிண்டல்கள் இல்லை, சீரியஸ்; வார்த்தைகளை வீணாக்கக் கூடாது பாஸு...
நம்ம ஊர்ல தற்போதைய சென்சேஷனல் மேட்டர், அவதூறு வழக்கு போடுறதுதான். கொட்டாவி விட்டா அவதூறு வழக்கு, கொறட்டை விட்டா அவதூறு வழக்கு, அட... குப்புறப் படுத்தாக்கூட அவதூறு வழக்காம்ப்பா... உங்களையெல்லாம் பார்த்தா எனக்கும் பாவமாத்தான் இருக்கு. இந்தா பொழைச்சு போங்க, டிப்ஸ் டூ அவதூறு வழக்குகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
* ‘ம்ம்ம்மா...’, ‘ம்ம்ம்மே’ என்று கத்தும் ஆடு, மாடுகளை வளர்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். ஆடு, மாட வச்சு ஈவ்டீசிங் பண்றாங்கன்னு அவதூறு வழக்கு போடப்படலாம்.
* சன் மியூசிக்கோ, சூரியன் எப்.எம்மோ, அருமைபாளையம் தாலுகா, எருமைப்பட்டிபுதூர் எத்திராஜ் பேசுறேன்னு, ‘யம்மா யம்மா காதல் பொன்னம்மா’, ‘ஹம்ம ஹம்ம ஹம்மா அந்த அரபிக்கடலோரம்’ போன்ற பாடல்களைக் கேட்காமல் நெடுந்தூரம் தள்ளி இருப்பது ரொம்ப நல்லது. தவறி போன் பண்ணிட்டா, ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’ன்னுட்டு வச்சிடணும்.
* ‘காலரா’ன்னு சொன்னதுக்குக்கூட வழக்காம். அது போன்ற ஆபாச(?!) வார்த்தைகளை தொண்டையிலேயே குழி தோண்டிப் பொதச்சிடணும். ஒருவேளை காலரா நம்மளை தாக்குனாக்கூட பூஜா ரூமோ, பாத்ரூமோ போயி ஒளிஞ்சிக்கணும்.
* ரோட்டுல கல்லு குத்தினாலோ, காட்டுல முள்ளு குத்தினாலோ, ‘அம்மா’ன்னு கத்த தொறந்த வாயில இருந்து, வெறும் காத்து மட்டும்தான் வரணும், இல்ல... சேகர் செத்துடுவான்.
* ‘குடை’, ‘கொடை’ போன்ற ரைமிங்கான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, காது ‘கொடை’யுறேன்னு சொல்லக்கூடாது, வேணா காது நோண்டுறேன்னு சொல்லலாம்.
* தூரத்து மீட்டிங்கிலயோ, தொலைக்காட்சி பேட்டிகளிலோ யாராவது ஆளுங்கட்சி கரைவேட்டி அளந்து விட்டுக்கிட்டு இருந்தா, வர்ற சிரிப்ப வாயிலையே அடக்கிட்டு, கோல்டன் பீச்சு ராஜா மாதிரி ரீயாக்ஷன் இல்லாம கமுக்கமா போயிடணும்.
* ஆச்சிக்கு மார்க் போடுறேன், ஆயாவுக்கு மார்க் போடுறேன்னு கிளம்புனா, மூஞ்சில மார்க் வாங்காம உட்கார முடியாது... சொல்லிட்டேன்!
* இடைத்தேர்தல், வடைத்தேர்தல்னு எங்கயாவது போயி, ‘உளுந்த சொல்றேன்... உண்மைய சொல்றேன்...’னு மனசு அலைபாஞ்சா, வழக்கு பாயலாம்.
* டீக்கடைக்குப் போனா டீ குடிக்க மட்டும்தான் வாய தொறக்கணும்; சலூன் கடைக்கு போனா முடி வெட்ட மட்டும் தலைய நீட்டணும்... புரியுதா சாரே?
தமிழ் இணைய உலகத்துல டாப் நியூஸ், கலைஞரின் ட்விட்டர் அக்கவுன்ட்தான். ஆரம்பிச்ச நாலு நாளிலேயே 6600 பேரு பின்தொடர செம ஹிட்டு. இத பார்த்துட்டு இன்னமும் பல தமிழக அரசியல், ஆன்மிக, சினிமா வி.ஐ.பிக்கள் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கலாம். அதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு எல்லோருக்கும் சில அக்கவுன்ட்ட ரிசர்வ் பண்ணி வச்சிருக்கோம். யாருக்கு எதுன்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க மக்களே...
சித்தப்பு@twitter.com
என்_ஆசை_மச்சான்@¡@twitter.com
அஸ்கு_லஸ்கு_காமராஜர்ஆட்சிC@twitter.com
அடங்கமறு_அத்துமீறு_அடுப்புலஇட்லிL@twitter.com
ஏ _புள்ள_வைஷ்ணவிM@twitter.com
தைலாபுரம் thunder@twitter.com
EVKSABCDEFGH@twitter.com
அங்கவை _சங்கவை@twitter.com
இது_எப்படி_இருக்கு@twitter.com
இவன்_யாரென்று_தெரிகிறதா@twitter.com
நெத்தியடி_ நித்திF@twitter.com
யான_தேசிகன்@twitter.com
தாமரை_boys@twitter.com
(பேசுவோம்)
கிச்சு கீச்சு
புரளி எஸ்.எம்.எஸ் பாகிஸ்தானிலிருந்து வந்தது - பிரதமர்
# நீங்க பஜ்ஜி சாப்பிடுங்க, நம்ம வீட்டுல முகப்பரு பத்தி நோ டென்ஷன்ன்ன்!
தமிழக மக்கள் தலையில கல்ல போட்டுட்
டாங்க; இருந்தாலும்
பரவாயில்ல, எல்லாம் கிரானைட் கல்லு..!
==
நரம்படி நாராயணசாமி:
கூடங்குளம் கரன்ட் வரும்
டெல்லில பிரதமரிடம் பேசினேன்
தமிழகத்திற்கே கூடங்குள மின்சாரம்
வரும் கூடங்குள கரன்ட்டு
பேசினேன் பிரதமரிடம் டெல்லில
கூடங்குள மின்சாரம் தமிழகத்திற்கே
பன்மோகன்கிங்:
எனக்கு எதுவும் தெரியாது
எதுவும் தெரியாது எனக்கு
தெரியாது எனக்கு எதுவும்
பெரிய அய்யா:
2016ல் எங்கள் ஆட்சி
டாஸ்மாக்கை பூட்டு போடணும்
யாருடனும் கூட்டணி இல்லை
சினிமா மக்களை கெடுத்துடுச்சு
நாங்க தனித்து போட்டியிடறோம்
ஆளுங்கட்சி அமைச்சர்கள்:
இதய தெய்வம் புரட்சித்தலைவி
என்றும் நிரந்தர முதல்வர்
மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரமே
மாண்புமிகு டாக்டர் அம்மா
நிரந்தர கழக பொதுசெயலாளர்
நற்குணங்களின் உறைவிடமே அம்மா
கருணையின் திருவுருவ தாயே
குயின்தாரா:
கிரபுதேவா என்னை ஏமாத்திட்டாரு
வம்புவுக்கும் எனக்கும் லவ்வில்ல
கிஷாலுக்கும் எனக்கும் நட்பே
இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்
பழசை எல்லாம் மறந்துட்டேன்
வம்புடன் நடித்தால் தப்பா?
அஹார்யா என் நண்பர்
பேக்டன்:
யாருக்கும் பயப்பட மாட்டேன்
பொய் வழக்கு போடறாங்க
மக்கள் தெய்வத்தோட கூட்டணி
சிறைக்கு அஞ்ச மாட்டேன்
நான் கோவக்காரன்தான்
தப்பு செஞ்சா அடிப்பேன்
ஏய்ய்ய்... ஊஊ... ஆங்!