‘‘திருடப் போற வீடுகள்ல எல்லாம் உன் குடும்பக் கஷ்டத்தை சொல்றியாமே... ஏன் கபாலி?’’
‘‘அவங்க இரக்கப்பட்டு ஸ்டேஷன்ல புகார் குடுக்காம இருந்தா எனக்கு மாமூல் செலவு மிச்சமாகுமே ஏட்டய்யா!’’
- அம்பை தேவா, சென்னை-116.
''என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையை பார்க்கச் சொன்னா, எதுக்கு வாய் பேச முடியாத மாப்பிள்ளையைக் காட்டினே..?’’
‘‘நீங்கதானே பிரதமர் மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்க..!’’
- சரவணன், கொளக்குடி.
‘‘நம்ம கட்சியோட சாதனையை விளம்பரப்படுத்தியதுல என்ன குழப்பம்..?’’
‘‘விளம்பரத்தின் உண்மைத் தன்மைக்கு தலைவர் பொறுப்பல்லன்னு எழுதியிருக்காம்..!’’
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.
என்னதான் ஒரு குடிகாரர் தண்ணி அடிச்சே செத்துப்போனாலும், அவருக்கும் ‘கண்ணீர் அஞ்சலி’ன்னுதான் போஸ்டர் ஒட்டுவாங்க; ‘தண்ணீர் அஞ்சலி’ன்னு ஒட்ட மாட்டாங்க!
- கன்னாபின்னான்னு தண்ணி அடிச்சாலும், கரெக்டா வீடு போய் சேருவோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘கட்சிக் கொள்கைக்கு எதிரா செயல்பட்டதா சொல்லி தலைவரை நீக்கிட்டாங்களா... அப்படி என்ன செஞ்சாரு அவர்?’’
‘‘தொகுதி மக்கள்கிட்ட குறை கேட்கப் போயிருக்கார்..!’’
- அ.ரியாஸ், சேலம்.
‘‘உமது ராகத்தில் பிழை உள்ளது புலவரே...’’
‘‘நான் கொட்டாவி விட்டேன் மன்னா..!’’
- சரவணன், கொளக்குடி.
ஜோக்கூஅன்று
சங்கம் வைத்து
தமிழை வளர்த்தார்கள்;
இன்று
சங்கம் வைத்து
தொழிற்சாலைகளை
மூடுகிறார்கள்!
- பெ.பாண்டியன்,
காரைக்குடி.