நியூஸ்வே

பிரிவு பற்றிய வருத்தம் துளியும் இல்லாமல் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார் பிரபுதேவா. ஐபிஎல் துவக்க விழாவில் ஆட்டம் போட்ட அன்றுதான் அவருக்கு பர்த் டே! அவர் கொடுத்த அட்டகாச விருந்தில் விஷால், ஜெயம் ரவி தம்பதி, குஷ்பு தம்பதியோடு கலந்துகொண்ட இன்னொரு ஸ்பெஷல் கெஸ்ட், த்ரிஷா!
ப்ரியங்கா சோப்ராவோடு நெருக்கமாகி விட்டார் ஐபிஎல் துவக்க விழாவில் ஆட்டம் போட வந்த கேட்டி பெர்ரி. இருவரும் இரவில் ஆட்டோவில் சென்னை வீதிகளில் வலம் வந்து உற்சாகக் கூச்சல் போட்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டசாலி ஆட்டோ டிரைவர் யாரோ?
‘கோச்சடையான்’ ஷூட்டிங் முடிந்ததும் லண்டன் பென்ட்லி ஹோட்டலில் நிருபர்களை சந்தித்தார் சூப்பர்ஸ்டார். ‘‘இது நடிகர்களின் படம் இல்லை; டெக்னீஷியன்களின் படம்’’ என்றவர், ‘‘ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அப்புறம் மகள் சௌந்தர்யா சொன்னதைச் செய்தேன்’’ என்றார் வெளிப்படையாக!
|