எகிறுது... எகிறுது... கரன்ட் பில்லு!





 ‘‘உஷ்! சப் மீட்டர் ஸ்பீடா ஓடுதுன்னு ஹவுஸ் ஓனர்கிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லைடி... நைட்டோட நைட்டா இப்படி சொல்லாம கொள்ளாம ஓடிட வேண்டியதுதான்!’’

‘‘அடக் கொடுமையே! ஒரே நேரத்துல அல்சர், சுகர், பி.பி, டிப்ரஷன், தற்கொலை எண்ணமா? கரன்ட் பில் ரீடிங்கை யாருங்க இவர்கிட்ட காட்டச் சொன்னது..?’’

‘‘எரிச்சலைக் கிளப்பாதேடா! எங்க அப்பாவுக்கு குளோபல் வார்மிங் அக்கறை எல்லாம் இல்லை... கரன்ட் பில் வார்னிங் இது!’’

‘‘நீங்களே சொல்லுங்க ஜட்ஜய்யா! பழைய வாடகை பாக்கிக்கும் கரன்ட் பில்லுக்கும் சேர்த்து, ஊர்ல இருக்கற என் நிலத்தை கிரயம் பண்ணித் தரச் சொல்லி ஹவுஸ் ஓனர் கேக்கறது நியாயமா?’’

‘‘இல்ல மாமி! வழக்கமா வர்ற கரன்ட் கட் இல்லை... கரன்ட் பில் ஏறாம இருக்க, எங்க ஆத்துக்காரர் பண்ற கட்!’’

‘‘கரன்ட் பில் மீட்டருக்கு மேல ஒரு பைசா எங்க ஹவுஸ் ஓனர் வாங்கறதில்லைன்னு சொன்னேன்... அதான் தேடிவந்து உங்க கால்ல விழறான் என் ஃபிரெண்டு!’’