‘‘தொலைவில் வரும் புறாவை தொலைநோக்கியில் பார்த்தே, அது எத்தனை கிராம் இருக்கும் என்று மன்னர் சொல்லிவிடுவாராம்... இது எதைக் காட்டுகிறது?’’ ‘‘மன்னருக்கு எடை நோக்குப் பார்வை அதிகம் என்பதைத்தான்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
என்னதான் விதி விளையாடினாலும், அதால ஒரு பரிசு கூட வாங்க முடியாது. - போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, விதியை நினைத்து புலம்புவோர் சங்கம்
- வே.முருகேசன், சென்னை-88.
‘‘தண்ணியடிச்சிட்டு பேங்குக்குப் போனது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... பேலன்ஸ் இல்லைன்னு திருப்பி அனுப்பிட்டாங்களா?’’
‘‘ம்ஹும்... அது பேங்க்கே இல்லைன்னு திருப்பி அனுப்பிட்டாங்க..!’’
- சரவணன், கொளக்குடி.
‘‘தவறான வழியில சம்பாதிச்ச பணம் நிலைக்காதுய்யா...’’
‘‘திடீர்னு இதை ஏன் சொல்றீங்க தலைவரே... உங்க வீட்ல ரெய்டு ஏதும் நடந்துடுச்சா?’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
ஒரு இட்லிக்கு நாலு விதமா சட்னி பண்ணலாம்; ஆனா ஒரு சட்னிக்கு நாலுவிதமா இட்லி பண்ண முடியுமா? - இட்லிக்கு மாவாட்டும் பரிதாப கணவன்மார் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
‘‘சனியோட பார்வை உங்க மேல இப்ப விழுந்திருக்கு தலைவரே..!’’
‘‘சனியோட பார்வை இருக்கட்டும் ஜோசியரே! சிபிஐயோட பார்வை என் மேல விழுந்திருக்கான்னு மட்டும் பார்த்துச் சொல்லுங்க...’’
- லாவண்யா, திருச்சி.
‘தீராவலி’க்கு மாத்திரை கொடுக்கலாம்; ‘சூறாவளி’க்கு மாத்திரை கொடுத்து குணப்படுத்த முடியுமா?- சூறாவளியால் தீராவலிக்கு ஆளானோர் சங்கம்- பெ.பாண்டியன், கீழசீவல்பட்டி.