வலைப் பேச்சு





இந்த கிரீமை தொடர்ந்து நாலு வாரம் யூஸ் பண்ணினால் பளிச்சிடும் சிகப்பழகு! அந்தக் கோயிலில் தொடர்ந்து நாலு வாரம் நெய் விளக்கேத்திட்டு வந்தால், நெனச்சது கைகூடும்!
வியாபாரிகள் என்னமா பெண்களை டார்கெட் பண்றானுங்க!
- கௌதமன்ஞிஷிரி

பால், பஸ் கட்டண உயர்வுக்கு இருந்ததில் பாதி எதிர்ப்புகூட மின்கட்டண உயர்வுக்கு இல்ல. இல்லாத விஷயத்தப் பத்தி ஏன் பேசணும்னு மக்கள் நினைச்சுட்டாங்க போல!
- டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

வெளியேற முடியாதபடி எல்லா கதவுகளையும் மூடிய பின், ஒற்றை ஜன்னலைத் திறக்கிறது காதல்...- மழைக் காதலன்

நூல் நூலாய்ப் பிரிக்க முனைவதைவிட அப்படியே சாப்பிடுவது நல்லது.  காதல் ஒரு இடியாப்பச் சிக்கல்
- ரமேஷ் ராக்ஸன்

அண்ணன் தம்பி சொத்து சண்டையில் அக்காளுக்கு மிஞ்சியது
அப்பாவின் காலொடிந்த நாற்காலி மட்டுமே...
- பேகம் பானு

உன்னில் நானும் என்னில் நீயும் ஒளிந்து இருக்கிறோம்
நாம் அறியாமலே!
- செம்மலர் செல்வன்

கோழி கிளறி கொத்தி எடுத்த புழுவாய் நினைவு
- சோனா கிரண்

அன்பானவர்கள் அழைக்காதபோதும் மனது அவர்களுடன் தன்னந்தனியாகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறது.
- பெருமாள் கருணாகரன்

======

  @thoatta   
உலகத்துல பலபேருக்கு சம்சாரத்தால பிரச்னை; நம்மள மாதிரி தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மின்சாரத்தாலும் பிரச்னை, என்ன வாழ்க்கைடா?

  @oruththan
  இன்னும் அதை ஏன் எமர்ஜென்சி லைட்டுன்னு..? எப்பவாச்சும் எரிஞ்சாதான் எமர்ஜென்சி லைட்டு. எப்பவுமே அதான்னா, அது நார்மல் லைட்டு:)

@_santhu  
மிக அரிதாகக் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு அதிகம்; விலையும் அதிகம்.
எ.கா. தங்கம், பிளாட்டினம், மின்சாரம்!

@g_for_Guru  
சயின்ஸ்படி கரன்ட்ட பார்க்க முடியாது; ஆனால் உணரலாம். தமிழகத்துல ரெண்டுமே முடியாது... விஞ்ஞானத்தோடயே
வீம்பா விளையாடுறோம்.

@Tottodaing
  இப்பவரைக்கும் கரன்ட் எப்ப வரும்னுதான் தெரியாம இருக்கு!
இனிமே கரன்ட் பில்லும் எவ்வளவு வரும்னு தெரியலையே?!

@charlesjeyamoon
  மின் பிரச்னைக்கு மூல காரணம் யார் - ஜெ விளக்கம்
சாமுவேல் மற்றும் நான்சிதான் காரணம் (எடிசன் பெற்றோர்) என தமிழக அரசு
அறிவித்தது.

  @gpradeesh
  501 யூனிட்டுக்கு ரூ.1806, 499 யூனிட் எனில் அரசின் மானியம் போக ரூ.1297
மட்டுமே... ஆக, 2 யூனிட்= 509 ரூ
மின் சிக்கனம், தேவை இக்கணம்:)