ஷாக் ஆயிட்டேன்!



Untitled Document



நண்பர்கள் கட்டண சேவை’ உண்மையிலேயே சினிமா கற்றுக் கொடுத்த சிறந்த தொழில்தான். ‘வசூலை விட, விருதுகளை விட, இதுவே பெரிது’ என்று சசிகுமார் சொல்லியிருப்பது உன்னதம்!
- ஆர்.தனபால், சென்னை63.


திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலய நகைகளின் மதிப்பீடே வருடக் கணக்கில் நடந்தால் அவற்றின் மதிப்பு எந்த அளவு இருக்கும்? இந்த நகைகளை வைத்து இந்திய மக்களுக்கே உதவலாம் போல இருக்கே!
- எம்.சம்பத், கரூர்.


 
பள்ளிக்கூடங்கள் பலி வாங்கும் இடங்களாக மாறியதற்கு பலர், பல காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தினாலும் நமது கல்வித் திட்டமும் பாடச் சுமையும்தான் முக்கிய காரணம் என்பதை பழநிபாரதி சுட்டிக் காட்டியிருப்பது நெத்தியடி!
 
 
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை37.


‘வினோத ரஸ மஞ்சரி’யில் சொக்க வைக்கிற அழகோடு ஜொலித்த அந்தப் பொண்ணைப் பார்த்துக் கிறங்கிப் போயிட்டேன். அது ஓர் ஆண் என்று படித்ததும் வடிவேலு போல, ‘ஷாக் ஆயிட்டேன்’!
 
- டி.ராஜாதிராஜன், புதுச்சேரி. 
 

வௌவால்களுக்குக் காவலாக வனாந்தரத்தில் வாழ்க்கை நடத்தும் பெரியவர் ஆறுமுகம் வியக்க வைக்கிறார். வௌவால்களின் மொழி பேசி அவற்றோடு உறவாடும் அவர், ‘குடும்பத்துக்கும் எனக்கும் ஒத்துப் போகல’ என்கிறபோது, மனித வர்க்கமே குற்றம் சுமந்து நிற்கிறது!
 
- கோ.கல்யாணசுந்தரம்,கோவை. 
 

‘இளமையில் கல்’ என்பார்கள். ஆனால், அந்த இளமைக் காலத்தில் கல்வியை இழந்து கல் சுமந்த தாமோதரன், தற்போது கல்வித் துறையிலேயே உச்சத்தை அடைந்திருப்பது அசத்தலான சாதனை.
 
 
-  இரா.வீரராகவன், காரமடை. 
 

பெண்களின் அழகைத் தூண்டில் புழுவாகப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைத்தான் இன்றைய விளம்பரங்கள் செய்கின்றன. இதைப் புரிந்துகொண்டு நிர்மலா தலைமையில் பெண்களே எதிர்ப்புக் குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது.
 
- அ.கு.ப.இரகுநாதன்,பூவிருந்தவல்லி.
 

‘மெட்டி ஒலி’ புகழ் திருமுருகனின் ‘விஜயா டீச்சர்’ தொடரில் வரும் புகைப்படங்களைப் பார்க்கும்போது, அப்படியே சீரியல் பார்த்த எஃபெக்ட் கிடைக்கிறது. எழுத்து நடை சீரியல் லைட்டாக ஜொலி ஜொலிக்கிறது.
 
- வ.பத்மா, ஸ்ரீரங்கம்.
 

உலகம் வேண்டாம் என்று ஒதுக்குவதெல்லாம் இந்தியாவுக்கும், இந்திய மாநிலங்கள் ஒதுக்குவதெல்லாம் தமிழ்நாட்டுக்கும் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதில் புது வரவான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் பற்றி விஞ்ஞானி பத்மநாபன் சொல்லியிருப்பதைப் படிக்கும்போதே உடல் நடுங்கியது.
 
 
-  எஸ்.சூர்யகலா, கன்னியாகுமரி.